லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

துப்பாக்கி முனையில் ரூ. 2 கோடி நகை, பணம் கொள்ளை!

ஓய்வுபெற்ற விஞ்ஞானியை தாக்கிவிட்டு, அவரது வீட்டில் துணிகரக் கொள்ளை

Published On :

தில்லியில் ஓய்வுபெற்ற விஞ்ஞானியை துப்பாக்கி முனையில் மிரட்டி, கொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

தில்லியில் பிரசாந்த் விஹார் பகுதியில் ஓய்வுபெற்ற விஞ்ஞானி ஷிபு சிங், தனது மனைவியுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (அக். 18) பிற்பகலில் இரண்டு பேர் தங்களை கூரியர் பணியாளர்களாகக் காட்டிக் கொண்டு, ஷிபுவின் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர்.

ஆனால், வீட்டுக்குள் நுழைந்ததும் ஷிபுவையும் அவரது மனைவியையும் துப்பாக்கி முனையில் மிரட்டி, கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர்களை எதிர்த்த ஷிபுவை தாக்கிவிட்டு, அங்கிருந்த ரூ. 2 கோடி மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் முழுவதையும் ஷிபு தனது மகனுக்கு போனில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, காவல்துறையினரிடம் ஷிபுவின் மகன் புகார் அளித்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், ஷிபுவையும் அவரது மனைவியையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.