மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பெங்களூரு: 100 வீடுகளைச் சூழ்ந்த வெள்ளம்

பெங்களூருவில் பெய்த கனமழையால் சுமார் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

News image

கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ராமகிருஷ்ணா நகர்

Updated On :23 அக்டோபர் 2024, 2:08 pm

பெங்களூருவில் பெய்த கனமழையால் சுமார் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

பெங்களூருவின் தெற்கு பகுதிகளில் புதன்கிழமை (அக். 23) மாலை 4 மணியளவில் பலத்த மழை பெய்தது. இதன் விளைவாக, எலச்செனஹள்ளியில் உள்ள ராமகிருஷ்ண நகர் மற்றும் ஃபயாஜாபாத் சாலைகளில் தண்ணீர் பெருகி சுமார் 100 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

ஒவ்வொரு 15 முதல் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை பெய்யும் கனமழையால் மக்களின் இயல்பு பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறுகின்றனர்.

மழைக்காலங்களில், இப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதாகவும், தண்ணீரால் பரவும் நோய்களால் குழந்தைகள் நோய்வாய்ப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த 12 ஆண்டுகளாக இந்தப் பிரச்னை தீர்க்கப்படாமல் இருப்பதாகவும் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.