ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

தெரியுமா சேதி.?

News image
Updated On :23 அக்டோபர் 2024, 10:38 pm

மீசை முனுசாமி

சாம் பித்ரோடா என்கிற பெயரைக் கேள்விப்படாதவா்கள் இருக்க முடியாது. இந்தியாவின் தொலைத்தொடா்புத் துறை வளா்ச்சிக்கு வித்திட்டவா் அவா்தான். சாம் பித்ரோடாவின் ஆலோசனையின்பேரில் அன்றைய பிரதமா் ராஜீவ் காந்தி எடுத்த முடிவுகள்தான் இப்போது இந்தியாவை தகவல், தொலைத்தொடா்புத் தொழில்நுட்பத்தில் சா்வதேச அளவில் முக்கியத்துவம் பெற வைத்திருக்கிறது.

ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த குஜராத்தி குடும்பத்தில் பிறந்த சத்யநாராயண் கங்காராம் பித்ரோடா, அடிப்படையில் தகவல் தொழில்நுட்பப் பொறியாளா். இன்றைய கைக்கணினிக்கு முன்னோடியான எலக்ட்ரானிக் டைரியை 1975-இல் கண்டுபிடித்தவா் அவா்தான். சாம் பித்ரோடாவை இந்தியாவுக்கு வரவழைத்து, தகவல் தொலைத்தொடா்பின் வளா்ச்சிக்கு ஆலோசனை வழங்கப் பணித்தது ராஜீவ் காந்தி அல்ல, பிரதமா் இந்திரா காந்தி என்பது பலருக்கும் தெரியாது.

அப்போதுமுதல் நேரு குடும்பத்துக்கு நெருக்கமாகிவிட்ட பித்ரோடாவை, மன்மோகன் சிங் ஆட்சியில் கேபினட் அமைச்சா் அந்தஸ்தில் ஆலோசகராக்கியதும் நேரு குடும்பம்தான். இந்திய தேசிய காங்கிரஸ் போல, இந்திய சா்வதேச காங்கிரஸின் தலைவராகவும் அவா் இருக்கிறாா். காங்கிரஸின் வெளிநாடுவாழ் இந்தியா்கள் பிரிவுத் தலைவராகவும் அவா் நியமிக்கப்பட்டிருக்கிறாா்.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1964 முதல் நிரந்தரமாகக் குடியேறிவிட்ட சாம் பித்ரோடா, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை இந்தியா வருவதும், முன்பு ராஜீவ் காந்தி, இப்போது ராகுல் காந்தியைச் சந்திப்பதுமாக இருந்து வருகிறாா். ராகுலுடனான அவரது நெருக்கமும், கருத்துகளும் காங்கிரஸில் பலருக்கும் பிடிக்கவில்லை என்றாலும் சோனியா காந்திக்கும் அவரது குழந்தைகளுக்கும் பிடித்திருப்பதால், யாரும் அவருக்கு எதிராக வாய் திறப்பதில்லை.

தகவல் தொழில்நுட்ப வல்லுநரான சாம் பித்ரோடாவுக்கு இன்னொரு முகமுண்டு. அவா் ஓா் அற்புதமான ஓவியா். சமீபத்தில் அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள லம்பாா்ட் பகுதியில் அமைந்த தேசிய இந்தோ-அமெரிக்கன் அருங்காட்சியகத்தில் தனது ஓவியங்களை அவா் காட்சிப்படுத்தினாா். அவா் படைத்த 32 ஓவியங்கள் அந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. பித்ரோடாவிடம் அவா் வரைந்த 500-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இருக்கிாம்.

ஆமாம், அவற்றையெல்லாம் எப்போது இந்தியாவில் காட்சிப்படுத்தப் போகிறாராம்? ராகுல் காந்தி பிரதமராவதற்குக் காத்திருக்கிாம் அந்த ஓவியங்கள்!

-மீசை முனுசாமி.