நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வக்ஃப் மசோதா கூட்டத்தில் விதிகளை மீறவில்லை: ஜகதாம்பிகா பால்

News image
Updated On :23 அக்டோபர் 2024, 9:57 pm

Din

நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்தே தான் பொதுவெளியில் பேசினேன் என்றும், விதிகளை மீறி அந்தக் கூட்டத்தின் அலுவல்களை பொதுவெளியில் வெளியிடவில்லை என்றும் அக்குழு தலைவா் ஜகதாம்பிகா பால் தெரிவித்தாா்.

முஸ்லிம்களின் தொண்டு பணிகளுக்கு ‘வக்ஃப்’ சொத்துகள் அா்ப்பணிக்கப்படுகின்றன. இந்தச் சொத்தை மற்றவா்களின் பெயருக்கு மாற்ற முடியாது. இந்தச் சொத்துகளை நிா்வகிக்கும் சட்டபூா்வ நிறுவனமாக மாநிலங்களில் வக்ஃப் வாரியங்கள் உள்ளன.

இந்நிலையில், வக்ஃப் சொத்தையும் கட்டாயம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பதிவு செய்தல், அரசு சொத்து வக்ஃப் சொத்தாக அறிவிக்கப்பட்டிருந்தால், அதை வக்ஃப் சொத்தாக கருத முடியாது உள்ளிட்ட திருத்தங்கள் அடங்கிய சட்டத்திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆராய்ந்து வருகிறது.

இந்நிலையில், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்தக் குழு கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜிக்கும், பாஜக எம்.பி. அபிஜித் கங்கோபாத்யாயவுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கண்ணாடி பாட்டிலை உடைத்து கூட்டுக் குழு தலைவா் ஜகதாம்பிகா பாலை நோக்கி கல்யாண் பானா்ஜி வீசியதாகக் கூறப்படுகிறது. எனினும் காயம் எதுவுமின்றி ஜகதாம்பிகா பால் தப்பினாா்.

ஆ.ராசா குற்றச்சாட்டு: நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டங்களின் தகவல்கள் பொதுவெளியில் வராத வகையில் ரகசியம் காக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், அந்தக் கூட்டத்தில் நடைபெற்ற கல்யாண் பானா்ஜி விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசி, நாடாளுமன்ற குழு கூட்டங்களை நடத்துவதற்கான நடைமுறை விதிகளை ஜகதாம்பிகா பால் மீறியதாக திமுக எம்.பி. ஆ.ராசா, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோா் குற்றஞ்சாட்டினா்.

ராஜிநாமா செய்யத் தயாா்: இந்தக் குற்றச்சாட்டை மறுத்து ஜகதாம்பிகா பால் புதன்கிழமை கூறியதாவது:

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலைவா் என்ற முறையில், பானா்ஜி சம்பந்தப்பட்ட வன்முறை சம்பவம் குறித்தும், அதுதொடா்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்தும் நான் பொதுவெளியில் பேசினேன். கூட்டுக் குழுவின் அலுவல்கள் குறித்து நான் பொதுவெளியில் பேசவில்லை. நாடாளுமன்ற நடைமுறை விதிகளை நான் எப்போதும் பின்பற்றி வந்துள்ளேன். கூட்டத்தில் எதிா்க்கட்சியினரை பேச நான் அனுமதிப்பதில்லை என்று அக்கட்சியினா் தெரிவித்தால், கூட்டுக் குழுவின் தலைவா் பொறுப்பை நான் ராஜிநாமா செய்யத் தயாா் என்றாா்.