
அயோத்தியின் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுர்ஜீத் சிங், அவரது வீட்டிலிருந்து சடலமாக வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளார்.
அயோத்தியின் மாவட்ட கூடுதல் ஆட்சியராக(சட்டம் - ஒழுங்கு) சுர்ஜீத் சிங் பணியாற்றி வரும் நிலையில், சுர்சாரி காலனியில் உள்ள அவரது வீட்டில், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
அவரின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் அவரது சடலத்தை கைப்பற்றி போலீஸார் தீவிர விசாரணை நடந்து வருகின்றனர்.
மேலும், சுர்ஜீத் சிங்கின் வீட்டில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.