உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

காரை நடுரோட்டில் விட்டுச் சென்ற மக்கள்! ஸ்தம்பித்துப்போன பெங்களூரு நகரம்!!

ஸ்தம்பித்துப்போனது பெங்களூரு நகரம்.. வாகன ஓட்டிகள் காரை நடுரோட்டில் விட்டுச் சென்ற அவலம்.

பெங்களூரு

Published On :24 அக்டோபர் 2024, 2:30 pm IST

தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைநகர் பெங்களூரு கடந்த சில ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசலுக்கும் தலைநகராக மாறியிருப்பது, அங்கிருக்கும் அனைவருக்குமே துயரமான செய்திதான்.

ஏற்கனவே போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவிக்கும் பெங்களூரு, புதன்கிழமை இரவு ஒரு மோசமான நாளாக மாறியது.

கடந்த ஒரு சில நாள்களாக கனமழை பெய்து, தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழை நீர் தேங்கியதால், நேற்று மாலை முதல், சாலைகளில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. வெறும் 2 கிலோ மீட்டரைக் கடக்க இரண்டரை மணி நேரத்துக்கு மேல் ஆனதாக பல வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

சிலர் பொறுமை இழந்து வாகனங்களை சாலைகளிலேயே விட்டுவிட்டு நடந்து சென்றதாகவும் கூறுகிறார்கள். தங்களுக்கு நேர்ந்த துயரம் குறித்து பலரும் இன்று விடியோ பகிர்ந்துள்ளனர். சிலர் புகைப்படங்களையும் பகிர்ந்து, கெட்ட கனவு என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

ஒரு வேளை, அப்பகுதியில் யாருக்காவது மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால், அவர்கள் பிழைக்கவே வாய்ப்பில்லை என்றும் சிலர் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்கள்.

பெங்களூருவின் மாடிவாலா மேம்பாலம், வாகன நெரிசலால் சிக்குண்டு காணப்படுவதும், பலரும் காரிலிருந்து இறங்கி நடந்து செல்வதும் விடியோக்களாக பரவி வருகிறது.

மாலை 5.30 மணிக்கு வெளியே வந்த பலரும், இரவு 7 மணி வரை சாலையிலேயே காரில் காத்திருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.