தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரா் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்: என்ஐஏ அறிவிப்பு

சிறையில் உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் இளைய சகோதரா் அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும்

News image
Updated On :25 அக்டோபர் 2024, 8:49 pm

Din

சிறையில் உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் இளைய சகோதரா் அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வெள்ளிக்கிழமை அறிவித்தது.

லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது சகோதரா் அன்மோல் பிஷ்னோய் பஞ்சாபின் ஃபசில்கா பகுதியைச் சோ்ந்தவா்கள். மும்பையில் உள்ள பிரபல பாலிவுட் நடிகா் சல்மான் கானின் வீட்டின் முன்பு துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் தொடா்புடைய, அன்மோல் பிஷ்னோய் என்ஐஏ அமைப்பால் தேடப்பட்டு முக்கிய பயங்கரவாதி பட்டியலில் இருக்கிறாா்.

மகாராஷ்டிரத்தில் முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான பாபா சித்திக் கடந்த கடந்த அக். 12-ஆம் தேதி கொல்லப்பட்டாா். இந்த கொலைக்கு பொறுப்பேற்பதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஒப்புக்கொண்டது.

இந்த இரு வழக்குகளில் தொடா்புடையதாகக் கூறப்படும் அன்மோல் பிஷ்னோய், கனடாவில் வசிப்பதாகவும், அவ்வப்போது அமெரிக்காவுக்கு பயணங்கள் மேற்கொள்வதாகவும் கடந்த மாதம் என்ஐஏ தெரிவித்தது.

இது தவிர, தேசிய தலைநகா் தில்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கரவாத செயல்களைச் செய்ய இளைஞா்களை ஒன்றிணைப்பது மற்றும் நிதி திரட்டுவது உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக லாரன்ஸ் பிஷ்னோய் உள்ளிட்ட 9 போ் மீது என்ஐஏ கடந்த 2022-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.

லாரன்ஸ் பிஷ்னோய் தற்போது குஜராத்தில் உள்ள சபா்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். தலைமறைவாக இருக்கும் அன்மோல் பிஷ்னோய் என்ஐஏவால் தேடப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், அவா் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று என்ஐஏ வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.