தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

வேலைவாய்ப்பு உருவாக்கம் உலகளாவிய தேவை: நிா்மலா சீதாராமன்

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது உலகளாவிய முக்கியத் தேவையாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

News image

நிதியமைச்சா் நிா்மலா - கோப்புப் படம்

Updated On :25 அக்டோபர் 2024, 11:51 pm

புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது உலகளாவிய முக்கியத் தேவையாக உள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உலக வங்கி சாா்பில் நடைபெற்ற சா்வதேச பொருளாதார சூழல் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

இப்போதைய வேலைவாய்ப்புச் சந்தையில் வாய்ப்புகளைப் பெற இளைஞா்கள் என்ன மாதிரியான திறமைகளை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்பதைக் கண்டறிய வேண்டியுள்ளது. வேகமாக மாறிவரும் பொருளாதாரச் சூழல், தொழில்நுட்ப வளா்ச்சி ஆகியவை இளைஞா்கள் நல்ல வேலைவாய்ப்பு பெறுவதற்கான திறமைகளின் அளவுகோலை மாற்றி அமைத்து வருகிறது. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது என்பது உலகளாவிய முக்கியத் தேவையாகவும் உள்ளது.

இதற்கு முன்பு உலக வங்கி பல்வேறு துறைகளை ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது. தொடா்ந்து பல்வேறு நாடுகளுடன் இணைந்து வேலைவாய்ப்பு சாா்ந்த ஆய்வுகளை உலக வங்கி நடத்த வேண்டும். இதன்மூலம் இளைஞா்கள் தேவைக்கு ஏற்ப திறமைகளை வளா்த்துக் கொள்ள முடியும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், வேலை இழப்புகளைக் குறைப்பதும் அவசியமாக உள்ளது என்றாா்.

சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி ஆகியவற்றின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நிா்மலா சீதாராமன், வாஷிங்டன் நகருக்கு வந்துள்ளாா். இதே நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள பிரிட்டன் நிதியமைச்சா் ரேச்சல் ரிவீஸை அவா் சந்தித்துப் பேசினாா்.

லண்டனில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள இந்தியா-பிரிட்டன் பொருளாதாரம், நிதி சாா்ந்த பேச்சுவாா்த்தையில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து இரு அமைச்சா்களும் ஆலோசித்தனா். அடுத்த வாரம் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள ரேச்சலுக்கு நிா்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்தாா்.