மகாராஷ்டிரத்தில் மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில், ரூ. 138 கோடியிலான தங்க நகைகளைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள மாநிலம் முழுவதும் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணமாகவோ பொருளாகவோ அரசியல் கட்சியினர் அளிக்கப்படுவதை தடுக்கும் வகையில், சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் பணியாற்றுகின்றனர்.
இந்த நிலையில், சஹாகர் நகரில் பத்மாவதி வளாகத்துக்கு அருகே மினிலாரி நடத்தப்பட்ட சோதனையில் பெட்டிகளில் வெள்ளைநிறப் பைகளில், சுமார் ரூ. 138 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து, மினிலாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில், மும்பையில் இருந்து புணே செல்லவிருப்பதாகவும், தன்னிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பதாகவும் ஓட்டுநர் தெரிவித்தார். இருப்பினும், இதனைச் சரிபார்ப்பதற்காக வருமான வரித்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
கடந்த அக். 21 ஆம் தேதியில் மும்பையிலிருந்து கோலாப்பூருக்கு செல்லும் புணே சதாரா நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் காரில் சென்றவர்களிடம் இருந்து ரூ. 5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ.245.50 கோடி தங்க நகைகள் பறிமுதல்
ஒரே நாளில் ரூ.12.60 லட்சம் பணம் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் ரூ.8.18 கோடி பணம், நகை பறிமுதல்

ஊத்துக்குளியில் ரூ.63,000 பறிமுதல்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

