ஜம்முவில் ராணுவ ஆம்புலன்ஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு
ஜம்முவில் ராணுவ ஆம்புலன்ஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஜம்முவில் ராணுவ ஆம்புலன்ஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் இன்று அதிகாலை ஜோக்வானில் உள்ள அசன் கோயில் அருகே பிரதான சாலை வழியாகச் சென்ற ராணுவ ஆம்புலன்ஸ் மீது மூன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதைத்தொடர்ந்து கோரின் பட்டால் பகுதியில் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
அப்போது பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், உயிர்ச்சேதம் குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது, ஆம்புலன்ஸ் வாகனத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் ஒரு டஜன் தோட்டாக்களால் துப்பாக்கி சூடு நடத்தினர்.
உடனே பயங்கரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க போலீசாருடன் இணைந்து ராணுவம் சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கையை துரிதமாக மேற்கொண்டனர் என்று கூறினர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...