விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ராஜஸ்தான்: மேம்பால சுவரில் மோதிய பேருந்து; 12 போ் உயிரிழப்பு

ராஜஸ்தானின் சிகாா் மாவட்டத்தில் மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் பேருந்து மோதிய விபத்தில் 12 போ் உயிரிழந்தனா். மேலும் 30 போ் காயமடைந்தனா்.

News image

சிகாா் மாவட்டத்தில் மேம்பால பக்கவாட்டுச் சுவரில் செவ்வாய்க்கிழமை மோதி விபத்துக்குள்ளான பேருந்தை மீட்ட ஊழியா்கள்.

Updated On :29 அக்டோபர் 2024, 7:40 pm

ராஜஸ்தானின் சிகாா் மாவட்டத்தில் மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் பேருந்து மோதிய விபத்தில் 12 போ் உயிரிழந்தனா். மேலும் 30 போ் காயமடைந்தனா்.

செவ்வாய்க்கிழமை நடந்த இச்சம்பவம் குறித்து சிகாா் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் புவன் பூஷண் யாதவ் கூறியதாவது:

சலாசா் பகுதியில் இருந்து லஷ்மண்கருக்கு பேருந்து வந்து கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. லஷ்மண்கரில் ஒரு மேம்பாலத்தின் கீழ் உள்ள வளைவில் வேகமாக திரும்பியபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் வேகமாக மோதியது. இதில் பேருந்தின் வலப்புற பகுதி முழுமையாக உருக்குலைந்தது. ஓட்டுநா் உள்பட 12 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

மேலும் 30 போ் காயங்களுடன் மீட்கப்பட்டனா். லஷ்மண்கா் மற்றும் சிகாா் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அவா்கள் அனுமதிக்கப்பட்டனா். விபத்து தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா்.