உத்தர பிரதேச வெள்ளம்: 26 மாவட்டங்கள் பாதிப்பு - 17,500 போ் மீட்புமாவட்ட நீதிபதிகளின் ஓய்வு வயது 62: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்கள் ஒப்புதல்396 ஆசிரியா்களுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சா் ராஜ்மோகன் இன்று வழங்குகிறாா்நிலக்கரியில் இருந்து வாயுக்களைப் பிரித்தெடுக்கும் திட்டம்: ஒப்பந்தப்புள்ளி கோராத நிறுவனங்கள்ரயில் நிலையங்களின் வருவாய் பட்டியல்: சென்ட்ரலுக்கு 3-ஆவது இடம்!

ஸ்கூட்டி பெண்ணால்... கேரள முதல்வரின் கார், பாதுகாப்பு வாகனங்கள் விபத்து!

இரு சக்கர வாகனத்தை ஓட்டிய பெண்ணால், முதல்வர் பினராயி விஜயனின் கார் விபத்தில் சிக்கியது பற்றி...

இணையத்தில் பரவும் விடியோ. - X

Published On :29 அக்டோபர் 2024, 9:57 am IST

கேரள மாநிலத்தில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண், திடீரென பிரேக் பிடித்து நின்றதால், முதல்வர் பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனங்கள் விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் கேரள முதல்வர் சென்ற கார் மற்றும் 5 பாதுகாப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரத்தின் எம்சி சாலையில் இருந்து அட்டிங்கல் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண், திடீரென்று நடுரோட்டில் பிரேக் பிடித்து வலதுபுறம் திரும்ப முயற்சித்துள்ளார்.

அப்போது, அவ்வழியாக சென்ற முதல்வர் பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனம், அந்த பெண் மீது மோதுவதை தவிர்ப்பதற்காக பிரேக் பிடித்து நிறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், தொடர்ந்து வந்த மற்ற பாதுகாப்பு வாகனங்கள், முதல்வரின் கார் மற்றும் ஆம்புலன்ஸ் என வரிசையாக அனைத்து வாகனமும் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.

எனினும், இந்த விபத்தில் பினராயி விஜயன் உள்பட யாருக்கும் பெரிய அளவிலான காயங்கள் ஏற்படவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஸ்கூட்டி பெண்ணால் நேர்ந்த விபத்தின் சிசிடிவி காணொலி இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.