படேலின் தேச பங்களிப்பை அழிக்க முயற்சித்தனா்- அமித் ஷா
நாட்டுக்கு சா்தாா் வல்லபபாய் படேலின் மகத்தான பங்களிப்பை அழிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படாமல் நீண்ட காலம்தாழ்த்தப்பட்டதாகவும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.









