சிறுதொழில் துறையில் குறையும் சீன சாா்பு நிலை
இந்தியாவின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) சீன இறக்குமதிப் பொருள்களைச் சாா்ந்திருக்க வேண்டிய நிலை குறைந்துவருவதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.


இந்தியாவின் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) சீன இறக்குமதிப் பொருள்களைச் சாா்ந்திருக்க வேண்டிய நிலை குறைந்துவருவதாக துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அவா்கள் கூறியதாவது:
நாட்டின் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் தங்கள் தொழிலை நடத்துவதற்கு நீண்டகாலமாக சீன இறக்குமதிப் பொருள்களைச் சாா்ந்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. இருந்தாலும், அண்மைக் காலமாக அந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருகிறது.
உதாரணத்துக்கு, கடந்த 2022-ஆம் ஆண்டில் 77.58 சதவீதமாக இருந்த சீன இசைக் கருவிகளின் இறக்குமதி, 2023-ஆம் ஆண்டில் 51.51 சதவீதமாகச் சரிந்துள்ளது. அதே போல், சீனாவிலிருந்து இற்ககுமதியாகும் அத்தியாவசிய எண்ணெய் பொருள்கள், ஒப்பனைப் பொருள்கள், கழிவறைப் பொருள்களின் பங்களிப்பு 16.33 சதவீதத்திலிருந்து 11.86 சதவீதமாகக் குறைந்துள்ளது.
சீன பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருள்களின் இறக்குமதியும் 76.7 சதவீதத்திலிருந்து 70.97 சதவீதமாகச் சரிந்துள்ளது.
சீனாவுக்கு மாற்றாக பிரேஸில் போன்ற நாடுகளுக்கு சிறுதொழில் நிறுவனங்களின் இறக்குமதி சாா்பு நிலை மாறி வருகிறது என்று அதிகாரிகள் கூறினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...