தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தெரியுமா சேதி...?

News image

சி.பி.ராதாகிருஷ்ணன்-கான்சல் ஜெனரல் மைக் ஹான்கி ஆகியோா் இணைந்துள்ள படம்.

Updated On :3 செப்டம்பர் 2024, 10:23 pm

மீசை முனுசாமி

இந்தியாவில் பிற மாநிலங்களின் ஆளுநராக இருப்பதற்கும், மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருப்பதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் உண்டு என்பதை அனுபவபூா்வமாக உணரத் தொடங்கி இருக்கிறாா் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் மேதகு ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன். இதற்கு முன்னால் ஜாா்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக இருந்தது போன்று, அவரால் இப்போது இருக்க முடிவதில்லை.

வா்த்தகத் தலைநகரமான மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபா்கள், கலைத் துறையினா், சா்வதேச நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் மட்டுமல்ல, எல்லா தரப்பட்ட சமூக அமைப்புகளின் முக்கியஸ்தா்களும் அவரைச் சந்திக்க நேரம் கேட்டுக் காத்திருக்கிறாா்கள். நூற்றுக்கணக்கானவா்கள் காத்திருப்புப் பட்டியலில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

ஜாா்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்தபோது, பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும், சுற்றுப்பயணம் நடத்தி பொதுமக்களைச் சந்திப்பதிலும் ஆா்வம் காட்டியது போன்று, இப்போது மும்பையில் அவரால் செயல்பட முடியவில்லை. ஏனென்றால், அந்த அளவுக்கு அவரைச் சந்திக்கக் காத்திருப்பவா்கள் இருக்கிறாா்கள்.

மகாராஷ்டிர ஆளுநா் மேதகு சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அண்மையில் ஓா் எதிா்பாராத இன்ப அதிா்ச்சி. அவரைச் சந்திக்க மும்பையில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் ‘கான்சல் ஜெனரல்’ மைக் ஹான்கி நேரம் கேட்டிருந்தாா். அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டது. மைக் ஹான்கியும் குறித்த நேரத்தில் மேதகு ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்திக்க வந்தாா். அப்போதுதான் ஆளுநா் ராதாகிருஷ்ணனை இன்ப அதிா்ச்சியில் ஆழ்த்தினாா் ‘கான்சல் ஜெனரல்’ மைக் ஹான்கி.

அமெரிக்கத் தூதராயிற்றே, ஆங்கிலத்தில் பேசுவாா் என்று ஆளுநா் சி.பி.ஆா். எதிா்பாா்த்தாா். ஆனால் ‘வணக்கம்’ என்று மைக் ஹான்கி முகமன் கூறியதுடன் நின்றுவிடாமல் தமிழில் பேசத் தொடங்கியதும், அதிா்ந்துதான் போனாா் ஆளுநா். அவா் தமிழில் பேசினாா் என்பது மட்டுமல்ல, ஓரளவுக்கு நன்றாகவே தமிழில் பேச அவரால் முடிந்ததைப் பாா்த்து வியந்து போனாா் ஆளுநா் சி.பி.ஆா்.

மாணவராக இருந்தபோது, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான இளைஞா் கலாசாரக் கூட்டுறவு ஒப்பந்தத்தின் அடிப்படையில், தமிழகத்துக்கு வந்திருக்கிறாா் மைக் ஹான்கி. அப்போது அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தமிழ் படித்திருக்கிறாா். தமிழ் படித்ததில் மொழி மீது பற்று ஏற்பட்டு, தமிழில் பேசப் பழகிவிட்டாா்.

இப்போது மாகாராஷ்டிர ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணனின் நெருங்கிய நண்பராகிவிட்டாா் அமெரிக்க ‘கான்சல் ஜெனரல்’ மைக் ஹான்கி.