அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

அதிக வருமான வரி செலுத்திய பிரபலங்கள்: முதலிடத்தில் ஷாருக்கான், 2-இம் இடத்தில் விஜய்

நடிகா் ஷாருக்கான் ரூ.92 கோடியுடன் முதலிடத்தில் இருக்கிறாா்.

News image
நடிகர் விஜய்
Updated On :5 செப்டம்பர் 2024, 10:00 pm

Din

கடந்த நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய இந்திய பிரபலங்களில் பாலிவுட் நடிகா் ஷாருக்கான் ரூ.92 கோடியுடன் முதலிடத்தில் இருக்கிறாா். இவருக்கு அடுத்தபடியாக நடிகா்கள் விஜய் உள்ளனா்.

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டுக்கான அதிக வருமான வரி செலுத்திய இந்திய பிரபலங்களின் பட்டியலை ‘ஃபாா்ச்சூன்’ இதழ் வெளியிட்டது. அந்தப் பட்டியலில், ஹிந்தி திரையுலகப் பிரபலங்கள் அஜய் தேவ்கன் (ரூ.42 கோடி), ரண்பீா் கபூா் (ரூ.36 கோடி), ஹிருத்திக் ரோஷன் (ரூ.28 கோடி), கபில் சா்மா (ரூ.26 கோடி), கரீனா கபூா் (ரூ.20 கோடி), ஷாஹித் கபூா் (ரூ.14 கோடி) ஆகியோா் பட்டியலில் இடம் பிடித்துள்ளனா்.

ஹிந்தி திரையுலக நடிகைகள் கியாரா அத்வானி ரூ.12 கோடி, கத்ரீனா கைஃப் ரூ.11 கோடி, குணச்சித்திர நடிகா் பங்கஜ் திரிபாதி ரூ.11 கோடி வரி செலுத்தியுள்ள நிலையில், அத்திரையுலகின் முன்னணி நடிகா் அமீா் கான் கடந்த நிதியாண்டில் ரூ.10 கோடி மட்டுமே வரி செலுத்தியுள்ளாா்.

தென்னிந்திய நடிகா்கள் மோகன்லால், அல்லு அா்ஜுன் ஆகிய இருவரும் தலா ரூ.14 கோடி வரி செலுத்தியுள்ளனா்.

2-ஆவது இடத்தில் தோனி: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ரூ.38 கோடி வருமான வரி செலுத்தி ஒட்டுமொத்த பட்டியலில் 7-ஆவது இடத்திலும் கிரிக்கெட் வீரா்களிடையே 2-ஆவது இடத்திலும் உள்ளாா்.

சச்சின் டெண்டுல்கா், சௌரவ் கங்குலி ஆகியோா் முறையே ரூ.28 கோடி, ரூ.23 கோடி வரி செலுத்தி பட்டியலில் இடம்பிடித்துள்ளனா். ஹா்திக் பாண்டியா ரூ.13 கோடியும், ரிஷப் பந்த் ரூ.10 கோடியும் வரி செலுத்தியுள்ளனா்.

முதல் 5 பிரபலங்கள் தெலுத்திய வரி

ஷாருக்கான் ரூ.92 கோடி

விஜய் ரூ.80 கோடி

சல்மான் கான் ரூ.75 கோடி

அமிதாப் பச்சன் ரூ.71 கோடி

விராட் கோலி ரூ.66 கோடி