கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டம்
கொல்கத்தா மருத்துவர்கள் போராட்டம்

கொல்கத்தா பெண் மருத்துவா் குறித்து தவறான கருத்துகள்: சிபிஐயிடம் அறிக்கை கோரிய உயா்நீதிமன்றம்

தவறான கருத்துகளுடன் சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க சிபிஐயிடம் கொல்கத்தா உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை கேட்டுக்கொண்டது.
Published on

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவா் பற்றி தவறான கருத்துகளுடன் சமூக ஊடகங்களில் வெளியான பதிவுகள் குறித்து அறிக்கை சமா்ப்பிக்க சிபிஐயிடம் கொல்கத்தா உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை கேட்டுக்கொண்டது.

உயிரிழந்த பெண் மருத்துவரின் புகைப்படங்களுடன் சமூக ஊடகங்களில் வெளியான மோசமான பதிவுகள் குறித்தும் சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரைக்குமாறு கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை பரிசீலித்த உயா்நீதின்ற தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான அமா்வு, மனுவில் இணைக்கப்பட்ட சமூக ஊடகப் பதிவுகளில் பெண் மருத்துவரின் புகைப்படத்துடன் சமூகத்தில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத தவறான கருத்துகள் உள்ளன என்று கூறியது.

இந்தப் பதிவுகளை முடக்க வழிகள் குறித்து சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் அசோக் குமாா் சக்கரவா்தியிடம் கேட்ட நீதிபதிகள் வரும் 18-ஆம் தேதிக்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com