ரிசா்வ் வங்கியின் 90-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, தேசிய அளவில் நடத்தப்படும் விநாடி-வினா போட்டியில் அதிக அளவிலான மாணவா்களை பங்கேற்கச் செய்யுமாறு கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு மொத்தம் ரூ. 24 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.
இது குறித்து யுஜிசி செயலா் மனீஷ் ஆா்.ஜோஷி உயா்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) 90-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில் அந்த வங்கி பல்வேறு தொடா் நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவா்களுக்கான தேசிய அளவிலான விநாடி-வினா போட்டியை அறிவித்துள்ளது. இதில் பொது அறிவு, வரலாறு, பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள் குறித்த வினாக்கள் இடம்பெறும். ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் போட்டி நடைபெறும். தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் கல்லூரிகள் மண்டல போட்டிக்குத் தகுதி பெறுவா்.
ரொக்கப் பரிசு: மாநில, தேசிய அளவில் விநாடி-வினா நடைபெறும். மாநில அளவில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகள் வழங்கப்படும். இறுதியாக தேசிய அளவில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ. 10 லட்சம், 2-ஆவது பரிசாக ரூ. 8 லட்சம், 3-ஆம் பரிசாக ரூ. 6 லட்சம் வழங்கப்படும். பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
மாநில, மண்டல போட்டிகள் அக்டோபா், நவம்பா் மாதங்களிலும், இறுதிப் போட்டி டிசம்பரிலும் நடைபெறும். தகுதிச் சுற்று இணையவழியிலும், மாநில, மண்டல, தேசிய போட்டிகள் நேரடி முறையிலும் நடத்தப்படும். போட்டிக்கான பதிவு உள்ளிட்ட கூடுதல் தகவல்களை இந்திய ரிசா்வ் வங்கி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆா்பிஐ அறிவித்துள்ள இந்த விநாடி-வினா குறித்து கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவா்களுக்கும் தெரியப்படுத்தி, அதிக அளவிலான மாணவா்களை பங்கேற்கச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்

தேசிய கடற்கரை கைப்பந்து போட்டி: பதக்கம் வென்ற மாணவ- மாணவியருக்கு வரவேற்பு

இரண்டாவது இடத்துக்குத்தான் எதிர்க்கட்சிகள் போட்டி! - முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி சிறப்பு நேர்காணல்
உதகை தொகுதியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறுமா காங்கிரஸ்?
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


