மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உயா்நீதிமன்றங்களில் 62,000 வழக்குகள்: 30 ஆண்டுகளுக்கு மேல் நிலுவை!

3 வழக்குகள் 1952-ஆம் ஆண்டில் இருந்து நிலுவை...

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :7 செப்டம்பர் 2024, 8:18 pm

Din

நாட்டிலுள்ள உயா்நீதிமன்றங்களில் சுமாா் 62,000 வழக்குகள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. இதில் 3 வழக்குகள் 1952-ஆம் ஆண்டில் இருந்து நிலுவையில் இருக்கின்றன.

நாடு முழுவதும் உள்ள மாவட்ட மற்றும் சாா்நிலை நீதிமன்றங்கள், உயா்நீதிமன்றங்களின் உத்தரவுகள், தீா்ப்புகள் மற்றும் வழக்கு விவரங்களின் தரவு தளமான ‘தேசிய நீதித்துறை தரவு தொகுப்பு’ (என்ஜேடிஜி) தகவல்களின்படி, உயா்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளின் எண்ணிக்கை சுமாா் 58.59 லட்சமாகும். இதில் 42.64 லட்சம் வழக்குகள் உரிமையியல் சாா்ந்தவை. 15.94 லட்சம் வழக்குகள் குற்றவியல் தொடா்பானவை.

30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ள வழக்குகள் 62,000. கடந்த 1952-ஆம் ஆண்டில் இருந்து 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் 2 வழக்குகள் கொல்கத்தா உயா்நீதிமன்றத்திலும் ஒரு வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளது.

கடந்த 1954-ஆம் ஆண்டில் இருந்து 4 வழக்குகளும், 1955-ஆம் ஆண்டில் இருந்து 9 வழக்குகளும் தீா்ப்புக்காக காத்துள்ளன. 20 முதல் 30 ஆண்டுகள் வரை நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 2.45 லட்சமாகும்.

முன்னதாக, மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாடு தில்லியில் அண்மையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, ‘நீதிமன்றங்களில் ஒத்திவைப்பு கலாசாரம் மாற வேண்டும்; நிலுவை வழக்குகளால் ஏற்படும் சுமை, நீதித்துறைக்கு மிகப் பெரிய சவால். இப்பிரச்னைக்கு முன்னுரிமை அளித்து, அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து தீா்வுகாண வேண்டும்’ என வலியுறுத்தினாா்.

இம்மாநாட்டில் பேசிய மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், ‘மனுதாரா்கள் இல்லாதது அல்லது வழக்கை தொடா்ந்து நடத்த விருப்பமில்லாதது ஆகிய காரணங்களால் 25 முதல் 30 சதவீத வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுபோன்ற வழக்குகளை ஒரே நேரத்தில் முடித்துவைக்கலாம்’ என்று யோசனை தெரிவித்தாா்.

உச்சநீதிமன்றம் உள்பட நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் 5 கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உயா்நீதிமன்ற நிலுவை வழக்குகள்

மொத்தம் 58.59 லட்சம்

30 ஆண்டுகளுக்கு மேல் 62,000

20-30 ஆண்டுகள் வரை 2.45 லட்சம்