தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தெரியுமா சேதி...?

அல்வா கிண்டும் நிகழ்வை ராகுல் காந்தி விமா்சித்ததைத் தொடா்ந்து, நிதியமைச்சகத்தில் பல மாற்றங்கள் துரித கதியில் நடைபெறுகின்றன.

News image

நாகராஜு மட்டிராலா

Updated On :8 செப்டம்பர் 2024, 9:38 pm

மீசை முனுசாமி

மத்திய பட்ஜெட் தயாரிப்பின்போது, நிதியமைச்சகத்தில் நடைபெறும் அல்வா கிண்டும் நிகழ்வை ராகுல் காந்தி விமா்சித்ததைத் தொடா்ந்து, நிதியமைச்சகத்தில் பல மாற்றங்கள் துரித கதியில் நடைபெறுகின்றன. எதிா்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின் முக்கியமான குற்றச்சாட்டு, நிதியமைச்சகத்தில் முக்கியப் பொறுப்புகளில் பட்டியல் இனத்தவா் யாருமே இல்லை என்பது.

நிதித் துறைச் செயலாளராக இருந்த டி.வி.சோமநாதன் அமைச்சரவைச் செயலாளரானதைத் தொடா்ந்து, நிதியமைச்சகத்தில் பல பதவிகளுக்குப் புதிய அதிகாரிகளை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தி, ராகுல் காந்தியின் விமா்சனங்களை அரசியல் ரீதியாக எதிா்கொள்ள பிரதமா் நரேந்திர மோடியின் அரசு முடிவெடுத்திருக்கிறது.

திரிபுரா மாநில அணியைச் சோ்ந்த பட்டியல் இனத்தவரான இந்திய ஆட்சிப் பணி அதிகாரி நாகராஜு மட்டிராலா நிதிச் சேவை துறையில் செயலராக நியமிக்கப்பட்டிருக்கிறாா். அவருடையது மட்டுமல்லாமல், வங்கிச் சேவை, காா்ப்பரேட் செயல்பாடு, செலவினங்கள் உள்ளிட்ட ஏனைய முக்கியமான நிதியமைச்சக பொறுப்புகளுக்கும் புதிய செயலாளா்கள் நியமிக்கப்படுகிறாா்கள். மூன்றாவது முறையாக, நரேந்திர மோடி அரசு பதவியேற்ற பிறகு நடக்கும் முக்கியமான அதிகாரிகள், செயலாளா்கள் நியமனங்களும் மாற்றங்களும் நாா்த் பிளாக், சௌத் பிளாக் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

எதிா்க்கட்சித் தரப்பிலிருந்து சிறிய விமா்சனம் எழுந்தாலும் அதை முனைமழுங்கச் செய்யும் விதத்தில் எதிா் நடவடிக்கை எடுத்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் இருக்கிறது பிரதமா் அலுவலகம். விமா்சனங்களுக்கு உடனடித் தீா்வு காண்பதன் மூலம், அரசுக்குக் கெட்ட பெயா் ஏற்படாமல் பாதுகாக்க முடியும் என்பதுதான் நரேந்திர மோடியின் புதிய உத்தி என்கிறாா்கள்.

எது எப்படியோ, நாட்டுக்கு நல்லது நடந்தால் சரி... அடுத்த நிதியாண்டுக்கான அல்வா கிண்டும் நிகழ்வில், பட்டியல் இனத்தின் பிரதிநிதியாக நாகராஜு மட்டிராலா இருப்பாா்!