பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,200 புள்ளிகள் குறைந்தது!தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும்: பாஜக அமைச்சர் உறுதி

ஜம்மு-காஷ்மீர் தேர்தல் பிரசாரத்தில் பாஜகவுக்கு ஆதரவு சேகரித்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

News image
பிரசாரத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
Updated On :8 செப்டம்பர் 2024, 6:00 pm

DIN

ஜம்மு-காஷ்மீரில் நடந்து வரும் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற அமைச்சர் ராஜ்நாத் சிங் பாஜகவுக்கு ஆதரவு கோரினார்.

ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பாஜக வேட்பாளர் ராகேஷ் சிங் தாகூருக்கு ஆதரவளிக்குமாறு, பிரசாரத்தில் பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கோரினார்.

அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது, ``2019 ஆம் ஆண்டு முதல் ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பாதுகாப்பு சூழ்நிலைகளால், இளைஞர்கள் கைத்துப்பாக்கிகள், ரிவால்வர்களுக்கு பதிலாக மடிக்கணினிகள் மற்றும் கணினிகளை தங்கள் கைகளில் வைத்திருக்கிறார்கள். இப்போது, ஸ்ரீநகரில் மக்கள்மீது துப்பாக்கி சூடு நடத்த யாரும் துணிவதில்லை. இது தொடர்வதற்கும், ஜம்மு-காஷ்மீரில் நிலையான வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கும் பாஜகவைதான் நீங்கள் ஆதரிக்க வேண்டும்.

மேலும், இவையனைத்தையும் பார்க்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள், பாகிஸ்தானுடன் வாழ விரும்பாமல், இந்தியாவுக்குதான் செல்வோம் என்று சொல்ல வேண்டும்.

பாகிஸ்தான் உங்களை வெளிநாட்டினராக கருதுகிறது என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசிப்பவர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன், ஆனால் இந்தியா உங்களை அவ்வாறு கருதவில்லை. நாங்கள் உங்களை எங்கள் சொந்தமாகதான் கருதுகிறோம்; எனவே, எங்களுடன் வந்து சேர்ந்து விடுங்கள்.

அதுமட்டுமின்றி, தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என உறுதியாக நம்புகிறேன். பாஜக ஆட்சிக்கு வந்தால், ஜம்மு-காஷ்மீர் நாட்டின் நம்பர் ஒன் மாநிலமாகவும், நவீன மாநிலமாக உருவெடுக்கும்.

2014-ல் நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு, மத்திய அரசின் செயல்திறன் குறித்து சொல்ல விரும்புகிறேன். அதாவது, பொருளாதாரத்தில் 11 ஆவது இடத்திலிருந்த இந்தியா வேகமாக முன்னேறியது. ஆகையால், ஓர் அரசு சுமூகமாக இயங்குவதற்கு பிரதமர், முதல்வர் பதவிகளில் திறமையான, வலுவான துடிப்பு கொண்ட நபர்கள்தான் தேவை.

2019 ஆண்டுக்கு முன்பாக, காஷ்மீரில் பயங்கரவாத சூழல் நிலவியது; ஆனால், இன்று யாரும் கைத்துப்பாக்கியை எடுக்கவோ, துப்பாக்கிச் சூடு நடத்தவோ துணிவதில்லை. இது ஒரு வலுவான தலைவர் ஆட்சியில் இருப்பதன் விளைவாகும்’’ என்று தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் செப். 18,25 மற்றும் அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவை நடைபெறவுள்ளது; தொடர்ந்து, அக்டோபர் 8ஆம் தேதியில் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

ராம்பன் தொகுதியில், தேசிய மாநாடு கட்சியின் அர்ஜுன் சிங் ராஜுவுக்கு எதிராக பாஜகவின் ராகேஷ் சிங் தாகூர் போட்டியிடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.