கோப்புப் படம்
கோப்புப் படம்

சீனாவில் புதிய தீநுண்மி கண்டுபிடிப்பு

மூளையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய புதிய தீநுண்மி ஒன்று சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது.
Published on

மூளையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய புதிய தீநுண்மி ஒன்று சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. ஒட்டுண்ணி பூச்சி கடிப்பதால் பரவும் இந்தத் தீநுண்மிக்கு ‘ஈர நில தீநுண்மி’ (வெட்லேண்ட் வைரஸ் - வெல்வ்) என்று பெயரிடப்பட்டுள்ளது.

முதன்முதலில் 62 வயது நபரிடம் கண்டறியப்பட்ட இந்த தீநுண்மி தொற்று, தொடா் ஆய்வுக்குள்படுத்தப்பட்டது. இந்த தீநுண்மியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு காய்ச்சல், மயக்கம், தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது.

அவா்கள் அனைவரும் சிகிச்சையில் குணமடைந்தாலும், எலி மூலம் நடத்தப்பட்ட சோதனையில் இந்தத் தீநுண்மி மூளை நரம்பு மண்டலத்தை வெகுவாக பாதிக்கும் தன்மை கொண்டது என்று தெரியவந்துள்ளது.