ஹரியாணா தேர்தல்: இன்று மாலைக்குள்.. காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கும் ஆம் ஆத்மி!
ஹரியாணா தேர்தலை முன்னிட்டு இன்று மாலைக்குள் கூட்டணியை முடிவு செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு அழுத்தம் கொடுக்கிறது ஆம் ஆத்மி


ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணியை காங்கிரஸ் இன்று மாலைக்குள் இறுதி செய்யாவிட்டால், 90 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என ஹரியாணா மாநில ஆம் ஆத்மி தலைவர் சுஷில் குப்தா மிரட்டல் விடுத்திருக்கிறார்.
அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், அக்கட்சி இந்த மிரட்டலை விடுத்துள்ளது.
ஹரியாணா மாநிலத்தில், உள்ள அனைத்து 90 தொகுதிகளிலும் ஆம் ஆத்மியே போட்டியிட்டாலும், கடுமையாக உழைக்க கட்சித் தொண்டர்கள் தயாராக உள்ளதாகவும் குப்தா தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...