தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஹரியாணா தேர்தல்: இந்தியா கூட்டணியில் முறிவு! ஆம் ஆத்மி தனித்துப் போட்டி

ஹரியாணா தேர்தல்: ஆம் ஆத்மி - காங். கூட்டணி முறிவு!

News image
- படம் | பிடிஐ
Updated On :9 செப்டம்பர் 2024, 6:25 pm

DIN

ஹரியாணாவில் இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஹரியாணாவில் அக்டோபர் 5 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி நடத்தி வந்த பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இதனிடையே, ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஆம் ஆத்மி திங்கள்கிழமை(செப். 9)வெளியிட்டது.

காங்கிரஸ் தலைமை, ஆம் ஆத்மி மற்றும் சமாஜவாதி கட்சிகளுடன் இணைந்து, இந்தியா கூட்டணியாக இத்தேர்தலில் போட்டியிட விரும்பியது. இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதில் ஹரியாணா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர் சிங் ஹூடா ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில், திங்கள்கிழமை(செப். 9) நடைபெற்ற இறுதிக்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையிலும் இரு கட்சிகளுக்குமிடையே சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் ஆம் ஆத்மி போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள இடங்களை விட்டுக்கொடுக்க காங்கிரஸ் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஆம் ஆத்மி காங்கிரஸுடன் கூட்டணியை முறித்துக் கொண்டது.

இதனையடுத்து, விரைவில் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை ஆம் ஆத்மி வெளியிட உள்ளது. மறுபுறம், காங்கிரஸ் மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடத் தயாராக உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.