
உத்தரப் பிரதேச அரசு ஆசிரியர் பணி நியமன வழக்கில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு நீதி கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி இன்று தெரிவித்துள்ளார்.
இடஒதுக்கீடு தொடர்பான புகார்களில் மாநிலத்தில் உள்ள 69,000 உதவி ஆசிரியர்களுக்கான புதிய தேர்வுப் பட்டியலைத் தயார் செய்யுமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து மாயவாதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மாயாவதி தனது எக்ஸ் தளப் பதிவில், “உ.பி ஆசிரியர் பணி நியமன வழக்கில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு எந்த அநீதியும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அவர்களுக்கான அரசியலமைப்பு உரிமைகள் கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசு நேர்மையான நிலைப்பாட்டை எடுத்து, அவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்யவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மாநில அதிகாரிகளால் ஜூன் 2020 மற்றும் ஜனவரி 2022ல் வெளியிடப்பட்ட 6,800 தேர்வாளர்களின் உதவி ஆசிரியர் தேர்வு பட்டியல்களை ரத்து செய்த உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்ச நீதிமன்றம் திங்கள் (செப். 9) அன்று நிறுத்தி வைத்தது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய ஒரு அமர்வு, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்ததுடன், ரவி குமார் சக்சேனா மற்றும் 51 பேர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் உத்தரப் பிரதேச அடிப்படை கல்வி வாரியத்தின் செயலாளர் உள்பட மாநில அரசுக்கும் மற்றவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து, மாநிலத்தில் 69,000 உதவி ஆசிரியர்களை நியமிப்பதற்கான புதியப் பட்டியலைத் தயார் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டிருந்தது.
கடந்தாண்டு மார்ச் 13 ஆம் தேதி நீதிபதி உத்தரவை எதிர்த்து மகேந்திர பால் மற்றும் பலர் தாக்கல் செய்த 90 சிறப்பு மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்யும் போது உயர்நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.