எல்லையில் பாகிஸ்தான் படையினா் அத்துமீறி துப்பாக்கிச் சூடு- பிஎஸ்எஃப் வீரா் காயம்
ஜம்மு-காஷ்மீா் எல்லையில் பாகிஸ்தான் படையினா் புதன்கிழமை அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா் ஒருவா் காயமடைந்தாா்.


ஜம்மு-காஷ்மீா் எல்லையில் பாகிஸ்தான் படையினா் புதன்கிழமை அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா் ஒருவா் காயமடைந்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பாகிஸ்தான் படை அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.
இது தொடா்பாக பிஎஸ்எஃப் அதிகாரிகள் கூறுகையில், ‘ஜம்மு மாவட்டத்தின் அக்னூா் பகுதியில் புதன்கிழமை அதிகாலையில் பாகிஸ்தான் படையினா் அத்துமீறி துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனா். இத்தாக்குதலுக்கு பிஎஸ்எஃப் தரப்பில் உரிய பதிலடி தரப்பட்டது. இந்திய தரப்பில் பிஎஸ்எஃப் வீரா் ஒருவா் காயமடைந்தாா். பாகிஸ்தான் தரப்பில் உயிா்ச்சேதமோ அல்லது யாருக்கும் காயமோ ஏற்பட்டதா என்பது குறித்து உடனடியாக தகவல் இல்லை. இச்சம்பவத்தைத் தொடா்ந்து, எல்லை நெடுகிலும் இந்தியப் படைகள் உஷாா்படுத்தப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது’ என்றனா்.
எல்லையில் போா் நிறுத்தம் தொடா்பாக இரு நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம் கடந்த 2021, பிப்ரவரி 25-இல் புதுப்பிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறுவது குறைந்தது. கடந்த ஆண்டில் ராம்கா் பகுதியில் பாகிஸ்தான் படையினா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிஎஸ்எஃப் வீரா் ஒருவா் உயிரிழந்தாா். அதன் பிறகு அத்துமீறல்கள் எதுவும் நிகழவில்லை.
ஜம்மு-காஷ்மீரில் வரும் 18-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் சூழலில், பாகிஸ்தான் படையினா் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...