வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தில்லி, வட மாநிலங்களில் நிலநடுக்கம்! மக்கள் அச்சம்

தில்லியில் நில அதிர்வு உணரப்பட்டது பற்றி...

News image
நிலநடுக்கம் (கோப்புப்படம்)- DIN
Updated On :11 செப்டம்பர் 2024, 8:23 am

DIN

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் புதன்கிழமை பகல் 12.58 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 5.8-ஆகப் பதிவாகியுள்ளதாக இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கமானது, பாகிஸ்தானின் பெஷாவர், இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் மாகாணங்களில் உணரப்பட்டதாக தகவல்கல் தெரிவிக்கின்றன.

மேலும், அண்டை நாடான ஆப்கன் மற்றும் இந்தியாவில் உள்ள எல்லையோர மாநிலங்களிலும் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைநகர் தில்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப் மற்றும் ஜம்மு - காஷ்மீரில் உள்ள சில இடங்களில் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, வீடுகள் மற்றும் அலுவகங்களில் இருந்து வெளியே வந்த மக்கள் சாலையில் தஞ்சமடைந்துள்ளனர்.

இரண்டாவது முறை

கடந்த இரண்டு வாரங்களில் தில்லியில் நிலநடுக்கம் உணரப்படுவது இரண்டாவது முறையாகும்.

ஆகஸ்ட் 29ஆம் தேதி ஆப்கானிஸ்தானில் 5.7 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தில்லியில் பல இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.