மருத்துவர்கள் போராட்டம்: மமதாவின் மின்னஞ்சல் அழைப்பில் இருந்தது என்ன?

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் குறித்து இளநிலை மருத்துவர் விளக்கம்..
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்கள்PTI
Published on
Updated on
1 min read

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் குறித்து விளக்கம் கிடைத்துள்ளது.

கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்களுக்கு முதல்வர் மமதா பானர்ஜி நேற்று (செப். 10) அழைப்பு விடுத்திருந்தார்.

முதுநிலை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்க தடையாக உள்ள விவகாரங்கள் குறித்து விவாதிக்க இளநிலை மருத்துவர்களுக்கு மேற்கு வங்க அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.

மேற்கு வங்க சுகாதாரத் துறை செயலாளர் என்.எஸ். நிகாம், இது தொடர்பாக மருத்துவர்களுக்கு மின்னஞ்சலும் அனுப்பியுள்ளார்.

உண்மை என்ன?

பேச்சுவார்த்தைக்காக இளநிலை மருத்துவர்களுக்கு மேற்கு வங்க அரசு அனுப்பியிருந்த மின்னஞ்சலில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தது என்பது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர் அகீப் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது,

மேற்கு வங்க தலைமைச் செயலகத்திலிருந்து நேற்று மின்னஞ்சல் வந்திருந்தது. அதில், மூத்த அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தனிப்பட்ட முறையில் மூடிய அறையில் நடைபெறும் ஆலோசனை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை நாங்கள் நிராகரித்துவிட்டோம். ஏனெனில் மூடிய அறையில் தனிப்பட்ட ஆலோசனையில் பங்கேற்க எங்களுக்கு விருப்பம் இல்லை.

ஆலோசனையில் ஈடுபடுட மருத்துவர்கள் வருகைக்காக முதல்வர் மமதா பானர்ஜி தனது அறையில் காத்துக்கொண்டிருப்பதாக எம்.எல்.ஏ. சந்திரிமா பட்டாச்சார்யா நேற்று தெரிவித்திருந்தார். ஆனால் அது குறித்து மின்னஞ்சலில் எதுவும் குறிப்பிடவில்லை.

பின்னர் முதல்வர் அலுவலகத்துக்கு நாங்கள் மின்னஞ்சல் அனுப்பினோம். அதில் எங்களின் 5 கோரிக்கைகளை முன்வைத்தோம். மருத்துவர் கொலை விவகாரத்தில் விசாரணைக்குத் தடையாக இருப்பவர்களை பதவிநீக்கம் செய்ய வேண்டும். தேர்தல் நடத்த அனுமதிக்க வேண்டும். கல்லூரி ஆலோசகருக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் மற்றும் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், குறிப்பிட்ட நபரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அல்ல என்ற 5 கோரிக்கைகளை முன்வைத்து மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம் என மருத்துவர் குறிப்பிட்டார்.

தொடரும் மருத்துவர்கள் போராட்டம்

மருத்துவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என முதல்வர் மமதா பானர்ஜி கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், கொல்லப்பட்ட மருத்துவருக்கு நீதி கிடைக்க வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இளநிலை மருத்துவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறைவிட மருத்துவர்கள், பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.

செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் போராட்டத்தை முடித்துக்கொண்டு மருத்துவர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்ற உத்தரவிட்டிருந்தது. எனினும், உச்சநீதிமன்ற உத்தரவை மீறி மேற்கு வங்க மாநிலத்தில், மருத்துவர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்கள்
வினேஷ் போகத்தை மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com