ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மேற்கு வங்க மக்கள் அதிகளவில் பாசத்தையும் ஒத்துழைப்பையும் அளித்துள்ளனர்: சி. வி. ஆனந்த போஸ்

மேற்கு வங்க மக்கள் எனக்கு அதிகளவில் பாசத்தையும் ஒத்துழைப்பையும் அளித்துள்ளனர் என சி.வி. ஆனந்த போஸ் கூறியது குறித்து...

C.V. Ananda Bose

மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் ஆனந்த போஸ் - கோப்புப் படம்

Published On :11 மார்ச் 2026, 3:13 pm IST

மேற்கு வங்க மக்கள் எனக்கு அதிகளவில் பாசத்தையும் ஒத்துழைப்பையும் அளித்துள்ளனர் என முன்னாள் ஆளுநர் சி. வி. ஆனந்த போஸ் தெரிவித்தார்.

மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்து வந்த சி. வி. ஆனந்த போஸ் தனது பதவியை மார்ச் 5 ஆம் தேதி ராஜிநாமா செய்தார். அவர் ராஜிநாமா செய்ததையடுத்து தமிழகத்தின் ஆளுநராகச் செயல்பட்டு வந்த ஆர்.என். ரவி மேற்கு வங்கத்திற்கு மாற்றப்பட்டார்.

மேற்கு வங்க மக்கள் குறித்து சி. வி. ஆனந்த போஸ், வங்காள மக்கள் எனக்கு அதிகளவிலான பாசத்தையும் ஒத்துழைப்பையும் அளித்துள்ளனர். அதை நான் நன்றாக உணர்கிறேன் எனக் கூறினார்.

தேர்தலுக்கு முன்னதாக மக்களுக்கு ஒரு செய்தியை வழங்குமாறு கேட்டபோது, “நாம் அனைவரும் தேர்தலில் பங்கேற்க வேண்டும். வாக்களிப்பதைத் தவறவிடக்கூடாது. வாக்களிப்பதற்கு முன் நன்கு சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி மாற்றப்பட்டிருக்கும் நிலையில், புதன்கிழமை (மார்ச் 11) காலை சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Former Governor C.V. Ananda Bose said that the people of West Bengal have given me immense affection and cooperation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.