இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

சீதாராம் யெச்சூரி மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

News image
சீதாராம் யெச்சூரியுடன் பிரதமர் மோடி
Updated On :12 செப்டம்பர் 2024, 12:51 pm

DIN

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சீதாராம் யெச்சூரி மறைவு

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலா் சீதாராம் யெச்சூரி (72) சுவாச நோய் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று (செப்டம்பர் 12) காலமானார்.

பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் தளப் பதிவு

இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி சீதாராம் யெச்சூரியுடன் இருக்கும் பழைய புகைப்படத்தையும் தன்னுடைய எக்ஸ் தளப்பக்கத்தில் பகிர்ந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “சீதாராம் யெச்சூரியின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. இடதுசாரிகளின் முக்கியத் தலைவராக இருந்தவர். திறமையான நாடாளுமன்ற உறுப்பினராகவும் முத்திரை பதித்தவர். யெச்சூரியின் குடும்பத்துக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.