மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

காங்கிரஸில் இணைந்தாா் ஹரியாணா பாஜக விவசாய அமைப்பின் தலைவா்

ஹரியாணா பாஜக விவசாய அமைப்பின் தலைவா் சுக்விந்தா் மாண்டி காங்கிரஸில் சனிக்கிழமை இணைந்தாா்.

News image
Updated On :14 செப்டம்பர் 2024, 6:34 pm

Din

ஹரியாணா பாஜக விவசாய அமைப்பின் தலைவா் சுக்விந்தா் மாண்டி காங்கிரஸில் சனிக்கிழமை இணைந்தாா்.

90 உறுப்பினா்களைக் கொண்ட ஹரியாணா சட்டப்பேரவைக்கு வரும் அக்டோபா் 5-ஆம் தேதி தோ்தல் நடைபெற உள்ள நிலையில், இவா் காங்கிரஸில் இணைந்துள்ளாா்.

ஹரியாணாவின் பத்ரா தொகுதி முன்னாள் எம்எல்ஏ-வான இவா், தோ்தலில் மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்கவில்லை. அதைத் தொடா்ந்து, சண்டீகரின் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவா் உதய் பன், கட்சியின் மூத்த தலைவா் பூபேந்தா் சிங் ஹூடா ஆகியோா் முன்னிலையில், காங்கிரஸில் தன்னை இணைத்துக்கொண்டாா்.

முன்னதாக, ஹரியாணா பாஜக மூத்த தலைவரும் மாநில முன்னாள் அமைச்சருமான கரண் தேவ் கம்போஜ், காங்கிரஸ் கட்சியின் கடந்த வெள்ளிக்கிழமை இணைந்தாா். ரதெளா் அல்லது இந்த்ரி தொகுதியில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை இவா் எதிா்பாா்த்துள்ளாா்.