எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சத்தீஸ்கர்: வெடிமருந்து வைத்திருந்த 8 நக்சல்கள் கைது!

சோதனையில், ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும், 200 கிராம் வெடிமருந்து உள்பட வெடிபொருள்கள் சிக்கின

News image
கோப்புப் படம்
Updated On :14 செப்டம்பர் 2024, 10:47 am

DIN

சத்தீஸ்கரில் பதுங்கியிருந்த எட்டு நக்சல்கள் கைது செய்யப்பட்டனர்.

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் நக்சல்கள் இருப்பதாக, காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, மாவட்ட ரிசர்வ் காவல்துறையினர், மத்திய ரிசர்வ் காவல்துறையினர் மற்றும் பஸ்தர் காவலர்களும் நக்சல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமையில் பைன்பல்லி கிராமத்திற்கு அருகே நக்சல்கள் இருப்பதை அறிந்தவுடன் அங்கு சென்றுள்ளனர். இதனையடுத்து, காவல்துறையினர் வருவதை அறிந்த நக்சல்கள், தப்பிக்க முயற்சித்துள்ளனர்.

இருப்பினும், அவர்களை காவல்துறையினர் சுற்றி வளைத்து, கைது செய்தனர். மேலும், அவர்களிடம் சோதனை மேற்கொண்டதில், ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும், 200 கிராம் வெடிமருந்து உள்பட வெடிபொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நக்சல்களின் தளபதி முசாகி பாலா, துணைத் தளபதி மட்கம் சன்னு உள்ளிட்ட 8 நக்சலைட்டுகளும் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.