தள்ளுபடி காரணமாக கார், பைக் மற்றும் மின்னணு சாதனங்களின் விற்பனை அதிகரிப்பு!

வாகனங்கள், மின்னணு சாதனங்கள் விற்பனை நிறுவனங்கள் பண்டிகைகளுக்கு அளித்த தள்ளுபடி காரணமாக அவற்றின் விற்பனை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் இருந்த மந்தமான விற்பனைக்குப் பிறகு வாகனங்கள், மின்னணு சாதனங்கள் விற்பனை நிறுவனங்கள் பண்டிகைகளையொட்டி அளித்த தள்ளுபடிகள் காரணமாக அவற்றின் விற்பனை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓணம், நவராத்திரி, தீபாவளி, தசரா பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதைத் தொடர்ந்து வாகனங்கள், மின்னணு சாதனங்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள் 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கி வருகின்றன.

கேரளத்தில் ஓணம் பண்டிகைக்கு முன்னதாக மாருதி சுசுகி நிறுவனத்தின் விற்பனை தொடர்பான முன்பதிவு 10 சதவீதம் அதிகரித்தது. அதேபோல, விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் முதல் நாளில் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகத்தில் விற்பனை அதிகரித்ததாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, ஓணம் பண்டிகையைத் தொடர்ந்து இருசக்கர வாகனங்களின் விற்பனை 15 முதல் 16 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

கோப்புப் படம்
ரூ.56,100 சம்பளத்தில் மத்திய பட்டு வாரியத்தில் சயின்டிஸ்ட் - 'பி' வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் சராசரியாக 3,30,000 வரையிலான எண்ணிக்கையில் வாகன விற்பனை நடந்துள்ளதாகவும், இது பண்டிகைக் காலங்களில் 15 சதவீதம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டை விட நுகர்வோர் பயன்பாட்டு மின்னணு சாதனங்கள் இந்த ஆண்டில் 7 முதல் 8 சதவீதம் வரைக்கும் உயர்ந்துள்ளது. ஓணத்தின் போது உறைவுத் தன்மை இல்லாத குளிர்சாதனங்களின் விற்பனை 15 சதவீதம் அதிகரித்து, ஒற்றைக் கதவு கொண்ட குளிர்சாதனங்களுன் விற்பனை 7 சதவீதம் வரைக்கும் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு தானியங்கி சலவை இயந்திரங்களின் விற்பனை 12 முதல் 13 சதவீதம் வரைகும் உயர்ந்து, அரை தானியங்கி சலவை இயந்திரங்களின் விற்பனை 5 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கோப்புப் படம்
மும்பை விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 5 மணிநேரம் உணவு, தண்ணீரில்லாமல் பயணிகள் அவதி

முன்னதாக, இந்த ஆண்டின் பண்டிகைக் காலங்களில் கிக் மற்றும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து 10 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சில்லறை வணிகம், இணைய வர்த்தகம், விநியோக நிறுவனங்கள், நுகர்வோர் பொருள்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள் போன்றவை ஆட்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் என தனியார் நிறுவன அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்தத் தொழில் நிறுவனங்களில், இணைய வர்த்தகத்தின் தேவை கடந்த ஆண்டை விட 22 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com