சில்லறை விலையை உயர்த்த வேண்டாம்; எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்!

குறைந்த வரியில் இறக்குமதி செய்யப்பட்ட கையிருப்பு 45 - 50 நாட்கள் வரை நீடிக்கும் என்றும் எனவே அதிகபட்ச சில்லறை விலையை அதிகரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

புதுதில்லி: குறைந்த வரியில் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் எண்ணெய்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளதால், இறக்குமதி வரி அதிகரிப்பைத் தொடர்ந்து சில்லறை விலையை உயர்த்த வேண்டாம் என்று சமையல் எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அதே வேளையில் குறைந்த வரியில் இறக்குமதி செய்யப்பட்ட கையிருப்பு சுமார் 45 முதல் 50 நாட்கள் வரை நீடிக்கும் என்றும் எனவே பதப்படுத்துபவர்கள் அதிகபட்ச சில்லறை விலையை அதிகரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் உள்நாட்டு எண்ணெய் வித்து விலைகளை பாதுகாக்க பல்வேறு சமையல் எண்ணெய்கள் மீதான அடிப்படை சுங்க வரியை அதிகரித்தது மத்திய அரசு.

கோப்புப் படம்
வட்டி குறைப்பு நம்பிக்கையில் புதிய உச்சத்தை எட்டிய சென்செக்ஸ், நிஃப்டி!

செப்டம்பர் 14 முதல், கச்சா சோயாபீன் எண்ணெய், கச்சா பாமாயில் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரி பூஜ்ஜியத்திலிருந்து 20 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கூடுதலாக, சுத்திகரிக்கப்பட்ட பாமாயில், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய் மீதான அடிப்படை சுங்க வரி 12.5 சதவிகிதத்திலிருந்து 32.5 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

உணவுச் செயலர் சஞ்சீவ் சோப்ரா, சால்வென்ட் எக்ஸ்ட்ராக்ஷன் அசோசியேஷன் ஆஃப் இந்தியா, இந்திய தாவர எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் சோயாபீன் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் விலை நிர்ணய உத்தியைப் குறித்து இன்று விவாதித்துள்ளார்.

குறைந்த வரியில் 30 லட்சம் டன் சமையல் எண்ணெய்கள் இறக்குமதி செய்யப்பட்டதும், இது 45 முதல் 50 நாட்கள் வரையிலான உள்நாட்டு நுகர்வுக்கு போதுமானது என்பதையும் மத்திய அரசு நங்கு அறியும். உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய இந்தியா அதிக அளவு சமையல் எண்ணெய்களை இறக்குமதி செய்கிறது. மொத்த தேவையில் இது 50 சதவிகிதத்திற்கும் அதிகமாக இறக்குமதியை நம்பியிருக்கிறது இந்தியா.

இறக்குமதி வரிகளை உயர்த்துவதற்கான முடிவை உள்நாட்டு எண்ணெய் வித்து விவசாயிகளை ஊக்குவிப்பதற்கான அரசின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். குறிப்பாக புதிய சோயாபீன் மற்றும் நிலக்கடலை பயிர்கள் அக்டோபர் 2024 முதல் சந்தைகளுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலிருந்து பாமாயிலை இறக்குமதி செய்கின்ற வேளைியில் பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவிலிருந்து சோயாபீன் எண்ணெயை இறக்குமதி செய்கிறது. சூரியகாந்தி எண்ணெய் முக்கியமாக ரஷ்யா மற்றும் உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.