
ஆர்.ஜி. கர் மருத்துவமனை தொடர்பான வழக்கில் திரிணமூல் எம்எல்ஏவுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்திய சோதனைகளில் முக்கிய ஆவணங்களை அமலாக்கத் துறை பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேற்கு வங்க மருத்துவ ஆள்சேர்ப்பு வாரியத்தின் உறுப்பினரும், மருத்துவ கவுன்சிலின் தலைவராகவும் மற்றும் ஆர்.ஜி. கர் மருத்துவமனையின் நோயாளிகள் நலக் குழுவின் தலைவராகவும் சுதிப்டோ ராய் உள்ளார்.
இந்த நிலையில், வடக்கு கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லம் மற்றும் அவர் நடத்தி வரும் முதியோர் இல்லத்திலும் இரண்டு முறை சோதனைகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன; ஒரு முறை அமலாக்கத்துறையும், மற்றொரு முறை மத்திய புலனாய்வுப் பிரிவும் நடத்தினர்.
செப்டம்பர் 17 ஆம் தேதியில், 20 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்த சோதனைகளின் முடிவில், ஆவணங்கள் நிறைந்த ஒரு பெட்டியை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை நீதிமன்றத்தின் கண்காணிப்பில் இருக்கும்போது, அமலாக்க வழக்கு தாக்கல் செய்த அறிக்கையால், அமலாக்கத்துறை இந்த வழக்கில் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.
அதுமட்டுமின்றி, ஆர்.ஜி. கர் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை, தனது சொந்த மருத்துவ இல்லத்திற்கு சுதிப்டோ மாற்றியதாக, எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக தலைவருமான சுவேந்து அதிகாரி மேற்கு வங்க சட்டப்பேரவையில் குற்றம் சாட்டியிருந்தார்.
இருப்பினும், சுவேந்துவின் குற்றச்சாட்டினை மறுத்த சுதிப்டோ, ஆதாரங்கள் இருக்கிறதா என்றும் கேட்டிருந்தார்.
ஆர்.ஜி. கர் மருத்துவமனை நிதி முறைகேடுகள் குறித்த சமீபத்திய விசாரணை உள்பட, மேற்கு வங்கத்தில் பல்வேறு நிதி மோசடிகள் குறித்த விசாரணைக்கு அதிக வேகத்தைக் கொண்டு வருவதற்காக, அம்மாநில அரசின் முக்கியப் பதவிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.