ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அதிஷி தில்லியின் எட்டாவது முதல்வராக அலுவலக பொறுப்புகளை இன்று ஏற்றுக் கொண்டார்.
கடந்த செப்.21-ஆம் தேதி மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தில்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவியேற்றுக்கொண்டார். ஆளுநர் வி.கே. சக்சேனா அவருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
தொடர்ந்து செளரப் பரத்வாஜ், கைலாஷ் கெலாட், கோபால் ராய், இம்ரான் ஹுசைன் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றனர். சுல்தான்பூர் எம்.எல்.ஏ. மஜ்ரா முகேஷ் அஹ்லாவத் புதிதாக அமைச்சர் பொறுப்பை ஏற்றார். இவர்களுக்கும் ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து இன்று தில்லியின் புதிய முதல்வராக அலுவலகம் வந்து அதிஷி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். தில்லி சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் செப்டம்பர் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
கேஜரிவால் அரசில் கல்வி, வருவாய், நிதி, மின்சாரம் மற்றும் பொதுப்பணித்துறை உள்ளிட்ட 13 இலாகாக்களை அதிஷி தன்வசம் தக்கவைத்துள்ளார்.
ராமரை அரியணையில் அமர்த்தி பரதன் செய்தது போல் தில்லி முதல்வராக நான்கு மாதங்கள் பணியாற்றுவேன்.
பதவி விலகியதன் மூலம் அரசியலில் கண்ணியத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் அரவிந்த் கேஜரிவால். அவரது பெயரைக் கெடுக்க பாஜக எந்த ஆயுதத்தையும் விட்டு வைக்கவில்லை.
முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்ட அதிஷி கேஜரிவால் பயன்படுத்திய நாற்காலியின் அருகில் உள்ள மற்றொரு நாற்காலியில் அமர்ந்தார்.
இதையடுத்து சௌரப் பரத்வாஜின் கீழ் ஆரோக்கியம், சுற்றுலா, கலை மற்றும் கலாசாரம் உள்பட அதிஷிக்கு அடுத்தபடியாக எட்டு துறைகளைத் தன்வசப்படுத்தியுள்ளார்.
மேலும் புதிய அமைச்சராகப் பதவியேற்ற முகேஷ், வேலைவாய்ப்பு மற்றும் நிலம் மற்றும் கட்டடத் துறைகளின் இலாகாவைப் பெற்றுள்ளார்.
கேஜரிவால் அரசில் அவர் வகித்து வந்த துறைகளான மேம்பாடு, பொது நிர்வாகத் துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஆகிய துறைகள் கோபால் ராய்க்கு வழங்கப்பட்டுள்ளன.
கைலாஷ் கஹ்லோட் போக்குவரத்து, வீடு, நிர்வாக சீர்திருத்தங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு ஆகியவற்றைத் தக்க வைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.