ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

மகாராஷ்டிரத்துக்கு இன்னும் தேர்தல் அறிவிக்காதது ஏன்?- காங்கிரஸ் கேள்வி!

மகாராஷ்டிர மாநிலத்துக்கு இன்னும் தேர்தல் அறிவிக்காதது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா கேள்வி எழுப்பியுள்ளார்.

RAMESH CHENNITHALA

Center-Center-Delhi

Published On :23 செப்டம்பர் 2024, 12:39 pm IST

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என வலியுறுத்தும் மத்திய அரசு, மகாராஷ்டிர மாநிலத்துக்கு இன்னும் தேர்தல் அறிவிக்காதது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனை(யுபிடி) ஆகிய கட்சிகள் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணியில் உள்ள நிலையில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.

இதையடுத்து மகாராஷ்டிர தேர்தல் குறித்து நாக்பூரில் செய்தியாளர்களுடன் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும் கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவருமான ரமேஷ் சென்னிதலா,

'மகாராஷ்டிரத்தில் எங்கள் கூட்டணி முதல்வர் வேட்பாளர் குறித்து விவாதிப்பதை நிறுத்திவைத்துள்ளோம். தேர்தல் முடிந்தபிறகு அதுகுறித்து பேசவிருக்கிறோம்.

மகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே எங்களின் ஒரே குறிக்கோள். ஊழல் மிக்க பாஜக அரசை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டும்' என்றார்.

மேலும் பேசிய அவர், 'ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிறார்கள். ஜம்மு-காஷ்மீர், ஹரியாணா தேர்தல்களுடன் ஏன் மகாராஷ்டிரத்துக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இங்கு தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக வேண்டும். ஏனெனில் மக்கள் பாஜக ஆட்சியை நீக்க காத்திருக்கிறார்கள்' என்று தெரிவித்தார்.

தொடர்ந்து திருப்பதி லட்டு கலப்பட விவகாரம் வருத்தமளிப்பதாகவும் உண்மை என்னவென்பதை நாட்டு மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.