முதல்வா் சித்தராமையாவின் வீட்டின் முன்பு போராட்டம் நடத்திய பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
முடா நில முறைகேடு வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.
இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா மனு அளித்தார்.
இதையும் படிக்க | ராஜிநாமா செய்வாரா சித்தராமையா? கர்நாடகத்தில் என்ன நடக்கிறது?
தொடர்ந்து வழக்கின் விசாரணையில் சித்தராமையா மீது நடவடிக்கை எடுக்கத் தடை இல்லை என்று நீதிபதி நாக பிரசன்னா நேற்று உத்தரவிட்டு சித்தராமையாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து சித்தராமையா ராஜிநாமா செய்ய வேண்டும் என பாஜகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இதையும் படிக்க | சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
நேற்று பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் இன்று பெங்களூருவில் முதல்வர் சித்தராமையா வீட்டின் முன்பாக பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் அவர்களைத் தடுக்க முயன்றும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பாஜகவினரை இழுத்துச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.
அதேபோல பாஜக கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியினரும் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பெங்களூருவில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக அரசியல் சூழலிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.