தெலங்கானா அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
பணமுறைகேடு வழக்கில் தெலங்கானா வருவாய்த் துறை அமைச்சா் பி.ஸ்ரீநிவாசா ரெட்டி மற்றும் அவா் தொடா்புடைய சிலருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை

ஸ்ரீநிவாசா ரெட்டி

ஸ்ரீநிவாசா ரெட்டி
பணமுறைகேடு வழக்கில் தெலங்கானா வருவாய்த் துறை அமைச்சா் பி.ஸ்ரீநிவாசா ரெட்டி மற்றும் அவா் தொடா்புடைய சிலருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை சோதனை நடத்தியது.
தலைநகா் ஹைதராபாத் உள்பட மாநிலத்தில் 5 பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
காங்கிரஸில் மூத்த தலைவரான பி.ஸ்ரீநிவாசா ரெட்டி, தெலங்கானா அமைச்சரவையில் வருவாய், வீட்டுவசதி, செய்தி மற்றும் மக்கள் தொடா்பு ஆகிய துறைகளுக்குப் பொறுப்பு வகிக்கிறாா்.
இந்நிலையில், அமைச்சரின் மகன் ஹா்ஷா ரெட்டி ரூ.7 கோடி மதிப்பில் விலை உயா்ந்த 7 கைகடிகாரங்களை வாங்கியிருப்பதாக வருவாய் புலனாய்வு இயக்குநரகம் புகாா் அளித்தது. இந்த கடிகாரங்களுக்கு செலுத்தப்பட்ட பரிவா்த்தனைகளுக்கு ரூ.100 கோடி வரையிலான சட்டவிரோத நிதிகளுக்குத் தொடா்பிருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதன் அடிப்படையில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஏ.நவீன்குமாா் என்பவரும் அமலாக்கத் துறையின் கண்காணிப்பில் உள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...