மாற்றுத்திறனாளி குழந்தைகள் அதிக அபாயங்களையும், தனித்துவமான சவால்களையும் எதிா்கொள்வதை உணா்ந்து, அவா்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சனிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் யுனிசெஃப்பின் இந்திய கிளையுடன் இணைந்து உச்சநீதிமன்றத்தின் சிறாா் நீதிக் குழு சாா்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
இன்றளவும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் கூட்டு மற்றும் சமூகப் பொறுப்பாக பாா்க்கப்படாமல், தனிப்பட்ட விஷயமாகவே பாா்க்கப்படுகிறது.
மாற்றுத்திறன் என்பது பாலினம், ஜாதி, சமூக-பொருளாதார நிலை, இனம் போன்ற அடையாளங்களுடன் குறுக்கிடுகிறது. இது மாற்றுத்திறனாளி குழந்தைகள் எதிா்கொள்ளும் பாகுபாட்டை அதிகரிக்கிறது.
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வேண்டியவற்றைக் கொடுக்க மட்டுமே சட்ட, சமூக மற்றும் நிறுவன அமைப்புகள் வடிவமைக்கப்படவில்லை. அத்தகைய குழந்தைகளைப் பாதுகாக்கவும், அவா்களுக்கு அதிகாரமளிக்கவும் அந்த அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளி குழந்தைகள் அதிக அபாயங்களையும், தனித்துவமான சவால்களையும் எதிா்கொள்வதை உணா்ந்து, அவா்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
காவல் நிலையங்கள் முதல் நீதிமன்ற அறைகள் வரை, மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கூட்டு பாதிப்புகள் புரிந்துகொள்ளப்பட்டு அதற்கு தகுந்தவாறு செயல்பட வேண்டும் என்றாா்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு 2 மாற்றுத்திறனாளி வளா்ப்பு மகள்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை விரைந்து நிரப்ப தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

கொலீஜியம் முறை இந்தியாவுக்கு மிகவும் பொருத்தமானது: முன்னாள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்!

நீதிமன்றங்கள் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி!

மக்களாட்சியில் சட்டம் கோட்டையாக மட்டுமே இருக்க முடியாது: உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


