காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை விரைந்து நிரப்பும்படி, அனைத்து மாநில உயா்நீதிமன்றங்களையும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து தில்லி வட்டாரத் தகவல்கள் கூறியதாவது: 25 உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் கடந்த வாரம் கடிதம் எழுதினாா். அந்தக் கடிதத்தில் உயா்நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதை அவா் சுட்டிக்காட்டியுள்ளாா். மேலும், அமா்வுகளில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும்படியும் வலியுறுத்தியுள்ளாா்.
கொலீஜியத்தின் பரிந்துரைகளை தாமதிக்க வேண்டாம் எனவும், புதிதாக காலியிடம் உருவாகும் முன்பு ஏற்கெனவே இருக்கும் காலியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகளை எடுக்கும்படியும் சூா்ய காந்த் அறிவுறுத்தியுள்ளாா் எனத் தெரிவித்தன.
முன்னதாக, உயா்நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை குறித்த தரவை மக்களவையில் அண்மையில் மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தாா். அதில், உயா்நீதிமன்றங்களில் 1,122 நீதிபதி பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் 308 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், 2014-ஆம் ஆண்டுமுதல் உயா்நீதிமன்றங்களில் 170 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், அவா்களில் 96 போ் கடந்த 5 ஆண்டுகளில் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்புடையது
இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!

நீதித்துறை உள்கட்டமைப்பு மேம்பாடு: உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் உயா் நிலைக் குழு அமைப்பு

எண்ம கைது மோசடி! நன்கு படித்தவா்களும் ஏமாற்றப்படுவது அதிா்ச்சியளிக்கிறது: உச்சநீதிமன்றம்

சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

