

ஜம்மு-காஷ்மீரில் தனிப் பெரும்பான்மையுடன் பாஜக அமைக்கவுள்ளதாக பிரதமர் மோடி பிரசாரத்தில் கூறியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் இரண்டு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், அக். 1 ஆம் தேதியில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந்த நிலையில், பாஜகவுக்கு வாக்குகள் சேகரிப்பதற்காக எம்.ஏ. திடலில் பாஜக மாபெரும் பிரசாரம் நடத்தியது. இந்த பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.
பிரசாரத்தில் பிரதமர் மோடி பேசியதாவது ``நான் ஜம்முவுக்கு வரும்போது மிகுந்த தேசபக்தியை உணர்ந்தேன். ஜம்மு-காஷ்மீரில் தேர்தலுக்கான என்னுடைய கடைசி பிரசாரம் இதுதான். தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளால் ஜம்மு-காஷ்மீர் மக்கள் சோர்வடைந்துள்ளனர்.
ஊழல், பயங்கரவாதம், குருதிக்களமாக இருந்த அவர்களின் ஆட்சியை, இங்குள்ள மக்கள் இனி விரும்பவில்லை; மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு அமைதி மற்றும் சிறந்த எதிர்காலத்தைதான் விரும்புகிறார்கள். அதனால்தான் ஜம்மு-காஷ்மீர் மக்கள் இங்கு பாஜக அரசை வெற்றிபெற வைக்க விரும்புகிறார்கள்.
இதுவரையில், ஜம்மு மக்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல்முறையாக, மக்கள் விரும்பும் அரசு ஜம்முவில் அமையவிருக்கிறது. இந்த வாய்ப்பை விட்டுவிடாதீர்கள். தேர்தலுக்குப் பிறகு, ஜம்மு-காஷ்மீரில் முதல்முறையாக முழு பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை அமைக்கும். ஜம்மு பலவித பாகுபாட்டை சந்தித்துள்ளது; அந்த பாகுபாட்டையெல்லாம் பாஜக அகற்றும்’’ என்று தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து வரும் நிலையில், பிரதமர் மோடி நான்காவது முறையாக இன்று பிரசாரத்தில் பங்கேற்றார்.
இரண்டு கட்டங்கள் முடிந்த நிலையில், அக். 1 ஆம் தேதியில் மூன்றாவது கட்டமாக ஜம்மு, சம்பா, கத்துவா மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் தேர்தல் நடக்கவுள்ளது.
இந்த 4 மாவட்டங்களில் பாஜக சார்பில் 24 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அக். 8 ஆம் தேதியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

புதுச்சேரி வளர்ச்சிக்கு காங்கிரஸ், திமுக வேகத் தடையாக இருந்தன: பிரதமர் மோடி
மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!

மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா! மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி புகழாரம்!!

ஜம்மு - காஷ்மீரில் 2024 முதல் 1400 சட்டவிரோத கட்டமைப்புகள் இடிப்பு! - முதல்வர் ஒமர் அப்துல்லா தகவல்!
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

