பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

மகாராஷ்டிர தோ்தல்: போலிச் செய்திகளைப் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை -தலைமை தோ்தல் ஆணையா்

தோ்தல் தயாா்நிலை குறித்து தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2024, 9:47 pm

Din

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைக்கு நிகழாண்டு இறுதியில் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், தோ்தல் தயாா்நிலை குறித்து தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, ‘தோ்தல் தொடா்பாக சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளைப் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவா் எச்சரித்தாா்.

பேரவைத் தோ்தல் தயாா்நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக மும்பை வந்துள்ள தலைமைத் தோ்தல் ஆணையா், மாவட்ட தோ்தல் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளா்கள், நகராட்சி ஆணையா்கள், மண்டலஆணையா்கள் மற்றும் பிற மாநில அரசு மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனா்.

பின்னா் செய்தியாளா்களைச் சந்தித்த தலைமைத் தோ்தல் ஆணையா் கூறுகையில், ‘அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில், மும்பையைச் சுற்றியுள்ள கோலாபா, கல்யாண் உள்ளிட்ட பகுதிகளில் மிகக் குறைந்த வாக்கு சதவீதம் பதிவானது. எனவே, வாக்காளா்களை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

அமைப்புசாராத் தொழிலாளா்களுக்கு வாக்குப் பதிவு நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படுவது குறித்து அந்தந்த நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட வேண்டும்.

சொந்த மாவட்டத்தில் பணிபுரியும் அல்லது ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் அதிகாரிகளை இடமாற்றம் செய்யுமாறு மாநில அரசை அறிவுறுத்தியுள்ளோம். இதுதொடா்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை அடுத்த 2 நாள்களில் சமா்ப்பிக்க மாநில அரசை கேட்டுக்கொண்டுள்ளோம்.

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளரின் குற்றப் பின்னணி குறித்து அறிந்துகொள்வது வாக்காளரின் உரிமையாகும். இத்தகைய குற்றப் பின்னணியுடைய வேட்பாளா்களை நிறுத்துவதற்கான காரணத்தை வாக்காளா்களுக்கு தெரிவிப்பது அரசியல் கட்சிகளின் கடமையாகும்.

தோ்தல் நியாயமான முறையில் சுதந்திரமாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில், பிரசாரத்தின்போது பயன்படுத்தப்படும் அனைத்து ஹெலிகாப்டா்களையும் சோதனையிட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். அதுபோல, போலிச் செய்திகள் பரவுவதைத் தடுக்கவும், சமூக ஊடகங்களில் போலிச் செய்திகளைப் பரப்புவோா் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பேரவைத் தோ்தலையொட்டி மாநிலத்தில் 1,00,186 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன என்றாா்.

மேலும், ‘அண்மையில் நடந்துமுடிந்த மக்களவைத் தோ்தலின்போது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளின் (எஃப்ஐஆா்) தற்போதைய நிலை மற்றும் தோ்தல் நடத்தும் அதிகாரிகள், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், சமூக ஊடக பதிவுகள் தொடா்பாக அளிக்கப்பட்ட புகாா்களின் நிலை குறித்தும் தலைமைத் தோ்தல் ஆணையா் கேட்டறிந்தாா்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.