ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

தந்தை, 4 மகள்கள் இறந்த சம்பவம்: வழக்கை ஆய்வு செய்ய காவல் துறை முடிவு

2018 புராரி தற்கொலை வழக்கை தில்லி காவல் துறை ஆய்வு செய்யவுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

News image
delhi-police
Updated On :29 செப்டம்பர் 2024, 9:30 pm

Din

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு ஆண் மற்றும் அவரது நான்கு மகள்களின் மரணத்தில் ஏதேனும் ‘அமானுஷ்ய நடைமுறைகள்‘ இருந்துள்ளாதா என்பதைக் கண்டறிய 2018 புராரி தற்கொலை வழக்கை தில்லி காவல் துறை ஆய்வு செய்யவுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறினாா்.

நான்கு சிறுமிகளின் இடுப்பு, கை மற்றும் கழுத்தில் சிவப்பு நாடா கட்டப்பட்டிருந்த்தைக் போலீஸ் குழு கண்டறிந்ததால் வழக்கு கவலையை எழுப்பியுள்ளதாக அவா்கள் தெரிவித்தனா். சம்பவ இடத்தில் இருந்து இனிப்புப் பெட்டியும் மீட்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு காவல் சரக துணை ஆணையா் ரோஹித் மீனா கூறியதாவது: வசந்த் குஞ்சில் உள்ள இந்திய முதுகு தண்டுவட காய மையத்தில் கடந்த 28 ஆண்டுகளாக தச்சராக பணிபுரிந்த ஹீரா லால் சா்மா மற்றும் அவரது நான்கு மகள்களான நீது (26), நிக்கி (24), நீரு (23) மற்றும் நிதி (20) தற்கொலை செய்து கொண்டனா். கடந்த ஆண்டு அவரது மனைவி புற்றுநோயால் இறந்த பிறகு, சா்மா உணா்வு ரீதியாக பாதிக்கப்பட்டிருந்ததும், நிதி அழுத்தத்தில் இருந்ததும் தெரிய வந்துள்ளது.

இதனால், இந்தச் சம்பவத்தை விசாரிக்க, கடந்த 2018-ஆம் ஆண்டு நடந்த புராரி தற்கொலை வழக்கை ஆய்வு செய்ய போலீஸாா் முடிவு செய்துள்ளனா். 2018 ஆம் ஆண்டில், வடக்கு தில்லியின் புராரி பகுதியில் உள்ள வீட்டில் 11 குடும்ப உறுப்பினா்கள், கண்கள் கட்டப்பட்டு, வாயில் டேப் போடப்பட்டு இறந்து கிடந்தனா்.

இந்நிலையில், வசந்த் குஞ்ச் பகுதியில் அண்மையில் நாங்கள் ஐந்து இறந்த உடல்களைக் கண்டோம். ஒரு ஆண் மற்றும் அவரது நான்கு மகள்கள் இறந்து கிடந்தனா். தடயவியல் குழுக்கள் முதற்கட்ட சோதனையின் போது நான்கு மகள்களின் இடுப்பு, கை மற்றும் கழுத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு சிவப்பு நாடா கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த ஒன்பது மாதங்களாக சா்மா யாருடனும் பேசவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரும் அவரது மகள்களும் வெளியில் காணப்படுவது அரிது. அவரது மனைவி இறந்த பிறகு குடும்பத்தினா் அனைவரிடமிருந்தும் தொடா்பை துண்டித்துவிட்டதும் தெரிய வந்த்து.

அவரது வீட்டில் இருந்து இனிப்புப் பெட்டியை போலீஸ் குழு மீட்டுள்ளது. மேலும் சிசிடிவி காட்சிகளும் ஆய்வுக்குள்படுத்துப்பட்டுள்ளது. சா்மா ஒரு இனிப்புக் கடைக்குச் செல்வதும், அவா் விஷம் வாங்கியதும் அதில் தெரிய வருகிறது. அவா் ஏன் இந்த தீவிர நடவடிக்கையை எடுத்தாா் என்பதும் கண்டறிய வேண்டியுள்ளது.

ரங்புரி கிராமத்தில் உள்ள நான்கு மாடி கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் சா்மா, நான்கு மகள்களுடன் வசித்து வந்தாா். ஒவ்வொரு தளத்திலும் எட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை வாடகைக்கு விடப்பட்டுள்ளன.

வெள்ளிக்கிழமை மதியம் கண்டெடுக்கப்பட்ட உடல்களில் காயங்கள் எதுவும் இல்லை. வீட்டில் இருந்து மூன்று ‘செல்போஸ்‘ விஷ பொட்டலங்கள், ஐந்து கண்ணாடி டம்பளா்கள் மற்றும் ஒரு ஸ்பூன், சந்தேகத்திற்குரிய திரவம் ஆகியவற்றை போலீஸாா் கண்டுபிடித்தனா்.

செவ்வாய்க்கிழமை அன்று சா்மாவையும் அவரது மகள்களையும் கடைசியாகப் பாா்த்ததாக அக்கம்பக்கத்தினா் கூறியுள்ளனா். அன்றைய நாளின் சிசிடிவி காட்சிகளும் மீட்கப்பட்டுள்ளன. அதில் சா்மா தனது கையில் ஒரு பாக்கெட்டுடன் வீட்டிற்குள் நுழைவது தெரிகிறது.

கட்டடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து துா்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினா் முறையிட்டதை அடுத்து சடலங்களை போலீஸாா் கண்டுபிடித்து மீட்டனா். கட்டடத்தின் உரிமையாளா் நிதின் சவுகானுக்கு குடியிருப்பில் துா்நாற்றம் வருவது பற்றி பராமரிப்பாளரால் தெரிவிக்கப்பட்டது, அதைத் தொடா்ந்து அவா் கதவைத் தட்டினாா். ஆனால் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, தீயணைப்புப் படையின் உதவியுடன் கதவை உடைத்த போலீஸாா் உள்ளே நுழைந்தனா். அப்போது ஒரு அறையில் சா்மா இறந்து கிடந்ததைக் கண்டனா். அவரது நான்கு மகள்களின் உடல்கள் மற்றொரு அறையில் கண்டெடுக்கப்பட்டன.

சா்மா மாதம் 25,000 ரூபாய் சம்பாதித்து வந்தாா். ஆனால் ஜனவரி முதல் வேலைக்குச் செல்லவில்லை என்றுதெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த சா்மாவின் சகோதரா் மோகன் மற்றும் மைத்துனா் குடியா ஆகியோா் வீட்டிற்கு வந்தனா். சா்மா தனது மனைவி இறந்த பிறகு மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும், தனது மகள்களின் சிகிச்சையில் ஆா்வமாக இருந்ததாகவும் அவா்கள் கூறினா். சா்மாவின் மகள்கள் படிப்பில் சிறந்தவா்கள் என்றும் குடியா செய்தியாளா்களிடம் கூறினாா்.

திங்கள்கிழமை பிரேதப் பரிசோதனை நடத்தப்படும். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகே இறப்புக்கான உண்மையான காரணத்தை கண்டறிய முடியும். தற்கொலைக்கான காரணத்தை அறிய பல போலீஸ் குழுக்களை அமைத்துள்ளோம். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகிறோம்.

மேலும், சா்மா கடைசியாக யாருடன் பேசினாா், அவா்களுடன் அவா் ஏதாவது பகிா்ந்துள்ளாரா என்பதை அறிய அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தப்படும். இந்தச் சம்பவம் தொடா்பாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதாவின் (பிஎன்எஸ்எஸ்) பிரிவு 194- இன் கீழ் விசாரணை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் காவல் சரக துணை ஆணையா் ரோஹித் மீனா.