தேர்தல் பணிகளை முடக்கும் நோக்கத்தில் தன்னை பாஜக சிறையில் அடைத்ததாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் இன்று (செப். 29) தெரிவித்தார்.
மாநில நலனுக்காக மேற்கொள்ளும் வேலையை நிறுத்தவும், நேர்மையற்றவர் என்பதை நிரூபிப்பதற்காகவும் திட்டமிட்டு சிறையில் அடைத்ததாகவும் குற்றம் சாட்டினார்.
ஹரியாணா மாநிலத்தில் அக்டோபர் 5ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஹரியாணாவில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சதீஷ் யாதவை ஆதரித்து அரவிந்த் கேஜரிவால் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பிரசாரத்தில் மக்கள் மத்தியில் கேஜரிவால் பேசியதாவது,
''தில்லி மக்கள் நலனுக்காக ஆம் ஆத்மி செய்யும் செயல்களை பிரதமர் நரேந்திர மோடி கவனித்து வருகிறார். தில்லியில் ஆம் ஆத்மி முதலில் வெற்றி பெற்றது. பின்னர் பஞ்சாபில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.
இது தொடர்ந்தால் ஹரியாணா மற்றும் குஜராத்திலும் ஆம் ஆத்மி வெற்றி பெறும் என்று அதனை நிறுத்துவதற்காகவே பாஜக என்னை சிறையில் அடைத்தது. மாநில நலனுக்கான என் வேலைகளை நிறுத்துவதற்கும், நேர்மையற்றவன் என நிறுவதற்கும் என்னை சிறையில் அடைத்தது.
ஆம் ஆத்மி ஆட்சியில் பள்ளிகளின் கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தனியார் பள்ளிகளில் இருந்து 4 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அதனால், ஆம் ஆத்மிக்கு வாக்களியுங்கள், உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை நாங்கள் உத்திரவாதம் அளிக்கிறோம்'' என கேஜரிவால் குறிப்பிட்டார்.
தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கேஜரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து செப். 13ஆம் தேதி ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தூக்கு தண்டனை அறை விவகாரம்: கேஜரிவாலுக்கு தில்லி சட்டப்பேரவை எச்சரிக்கை

பிரதமா் மோடி நோ்மையின்மை மூலம் தோ்தல்களில் வெற்றி: கேஜரிவால் குற்றச்சாட்டு

மதுபான கொள்கை வழக்கு: வேறு அமா்வுக்கு மாற்ற கோரி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கேஜரிவால் கடிதம்

தில்லி பேரவை வளாகத்தில் உள்ள தூக்கு அறை விவகாரம்- உரிமை மீறல் ஆய்வு குழு முன்பு நாளை மறுநாள் கேஜரிவால் ஆஜராகிறாா்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


