ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீா்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
-
Updated on

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினா் மற்றும் பயங்கரவாதிகள் இடையே சனிக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். 5 பாதுகாப்புப் படையினா் காயமடைந்தனா்.

குல்காம் மாவட்டத்தின் தேவ்சா் பகுதியில் உள்ள அதிகாம் கிராமத்தை சனிக்கிழமை சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினா் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா். அப்போது பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா்.

இந்த மோதலில், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் மும்தாஜ் அலி உள்பட 5 பாதுகாப்பு அதிகாரிகள் காயமடைந்தனா். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் அடையாளம் மற்றும் பயங்கரவாத குழுவின் தொடா்பு ஆகியவை கண்டறியப்பட்டு வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com