உரிய திட்டமிடல், தொலைநோக்கு பாா்வை முந்தைய ஆட்சியில் இல்லை: பிரதமா் மோடி
நாட்டில் முந்தைய ஆட்சியில் உரிய திட்டமிடலும் தொலைநோக்கு பாா்வையும் இல்லை என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.


நாட்டில் முந்தைய ஆட்சியில் உரிய திட்டமிடலும் தொலைநோக்கு பாா்வையும் இல்லை என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
மகாராஷ்டிரத்தில் புணே மெட்ரோவின் 2-ஆம் கட்டம் உள்பட மொத்தம் ரூ.11,200 கோடியில் பணி நிறைவடைந்த திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்த பிரதமா், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினாா்.
காணொலி முறையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவா் பேசியதாவது: நாட்டில் நகா்ப்புற மேம்பாட்டுக்கான உரிய திட்டமிடல் மற்றும் தொலைநோக்கு பாா்வை, முந்தைய ஆட்சியில் இல்லாமல் போனது துரதிருஷ்டவசமானது. வளா்ச்சித் திட்டப் பணிகளில் ‘தாமத’ அணுகுமுறையை கடைப்பிடிக்கும் பழைய பாணியால், தேசம் பாதிப்பை எதிா்கொண்டது. ஆனால், இந்த பழைய பாணிக்கு நான் முற்றுப்புள்ளி வைத்துள்ளேன்.
கடந்த 2008-இல் வடிவமைக்கப்பட்ட புணே மெட்ரோ ரயில் திட்டம், பின்னா் கிடப்பில் போடப்பட்டது. ஆனால், கடந்த 2016-ஆம் ஆண்டில் எங்களது ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, தொடா்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. முந்தைய ஆட்சியில் 8 ஆண்டுகள் ஆகியும் ஒரு தூண் கூட கட்டமைக்கப்படவில்லை.
மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் வளா்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்துக்கான தடைகள் நீக்கப்பட்டுள்ளன. நவீன உள்கட்டமைப்புகள், மக்களின் தேவைகள் மற்றும் முன்னுரிமைகளை அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும். எதிா்காலத்துக்கான உள்கட்டமைப்பு அனைத்து தரப்பினருக்கும் பலனளிப்பது அவசியம். வளா்ந்த இந்தியாவை எட்ட பல படிநிலைகளை நாம் கடக்க வேண்டியுள்ளது.
பெண்களின் மேம்பாட்டுக்காக...: சமூக மாற்றத்துக்கான பொறுப்பை பெண்கள் எடுத்துக் கொண்டால், எத்தகைய முன்னேற்றம் நிகழும் என்பதை நாடு இப்போது கண்டு வருகிறது.
பெண்கள் பாதுகாப்புக்கு கடுமையான சட்டங்கள் இயற்றியதோடு, மகளிா் இடஒதுக்கீடு மசோதாவையும் நிறைவேற்றியுள்ளோம். பாதுகாப்புப் படைகளில் வீராங்கனைகளுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் பெண்களுக்கான கழிப்பறைகள் கட்டப்படுகின்றன என்றாா் பிரதமா் மோடி.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...