தட்டிக்கேட்ட தில்லி காவலரை காரில் துரத்தி, இடித்துக் கொன்ற கொடூரம்- அதிர்ச்சி தரும் விடியோ
காருக்குள் குடித்துக்கொண்டிருந்தவர்களை தட்டிக்கேட்ட தில்லி காவலரை காரில் துரத்தி, இடித்துக் கொன்ற குடிகாரர்கள்!


30 வயதான தில்லி தலைமைக் காவலர், இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவர்களை தட்டிக் கேட்டதால், அவர்கள் காவலரை காரில் துரத்தில் இடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காரில் இடித்து 30 அடி தொலைவுக்கு இழுத்துச்சென்று, தலைமைக் காலவர் சந்தீப் மீது காரை ஏற்றிக் கொன்ற சம்பவம் தில்லியின் நங்லோய் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.15க்கு நிகழ்ந்துள்ளது.
காரில் இருந்த இரண்டு பேருமே மதுபோதையில் இருந்துள்ளனர். காரில் இடித்த சம்பவத்துக்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்புதான், காருக்குள்ளே அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தவர்களை சந்தீப் கண்டித்துள்ளது தெரிய வந்துளள்து.
இது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டு பேரில் ரஜ்னீஷ் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதற்குள் மதுபானங்களும் இருந்துள்ளன.
சம்பவம் நடந்த பகுதியில் அதிகமான கொள்ளைச் சம்பவங்கள் நடப்பதால், தலைமைக் காவலர் சந்தீப், சாதாரண உடையில் இரவு நேரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
ரயில்வே வாகன நிறுத்துமிடத்தில் நின்றிருந்த காரில் இரண்டு பேர் அமர்ந்து மதுக் குடித்துக கொண்டிருந்ததாகவும், உடனடியாக இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்றும் அவர்களை சந்தீப் எச்சரித்திருந்ததும் தெரிய வந்துள்ளது.
அவர்கள் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார்கள். ஆனால் சற்று தூரத்தில் காத்திருந்து, அவ்வழியாக சந்தீப் வரும்போது, அவர் மீது காரை ஏற்றிக் கொன்றிருக்கிறார்கள்.
இந்த சம்பவம் முழுக்க அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...