டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

மும்பை விமான நிலையத்தில் ரூ.43 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!

மும்பை விமான நிலையத்தில் ரூ.43 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :3 பிப்ரவரி 2024, 12:55 pm

DIN


மும்பை: மும்பை விமான நிலையத்தில் ரூ.43 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மும்பை விமான நிலையித்தில் துபையில் இருந்து சனிக்கிழமை மும்பை வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது இந்தியாவைச் சேர்ந்த பயணி ஒருவர் கொண்டு வந்த சாக்லேட் பெட்டிகள் மற்றும் பேபி பவுடர் குப்பிகளில் தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.43 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனவரி 20 ஆம் தேதி சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் வெனிசுலாவிலிருந்து வந்த பயணியிடமிருந்து ரூ.6.2 கோடி மதிப்புள்ள 628 கிராம் கோகோயின் போதைப்பொருளை மும்பை வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.