போர் எங்கள் நோக்கமில்லை, ஆனால்...: ஹிஸ்புல்லாவை எச்சரித்த இஸ்ரேல்

இஸ்ரேல்- ஹமாஸ் போர் நான்கு மாதங்களை நிறைவு செய்யவுள்ளது. இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பை எச்சரித்துள்ளது இஸ்ரேல்.
லண்டனில் பாலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் | AP
லண்டனில் பாலஸ்தீன ஆதரவாளர்களின் போராட்டம் | AP

லெபனான் நாட்டைச் சேர்ந்த, ஈரான் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லாவுக்கு இஸ்ரேல் விரிவான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் போர் நான்காவது மாதத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில் போர் நிறுத்த பேச்சுவார்த்தை இன்னும் முடிவுக்கு வரவில்லை. 

இதுகுறித்து, “போர் எங்களின் முதன்மையான நோக்கம் இல்லை, ஆனால் தயாராக இருக்கிறோம். ஹிஸ்புல்லா எங்கெல்லாம் செயல்படுகிறதோ அங்கெல்லாம் நாங்கள் செயல்படவுள்ளோம். மத்திய கிழக்கில் எங்கு தேவைப்படுகிறதோ அங்கு நடவடிக்கை எடுப்போம். லெபனான், சிரியா மட்டுமில்லை வேறு தொலைவு பகுதிகளாக இருந்தாலும் இது பொருந்தும்” என இஸ்ரேலிய ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகேரி தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் உடனான இஸ்ரேலின் போர் நிறுத்தம் என்பது ஹிஸ்புல்லாவுக்கு பொருந்தாது. இஸ்ரேலைத் தூண்டுமாறு நடந்துகொண்டால் இஸ்ரேல் உடனடியாக அதற்கு பதிலடி கொடுக்கும் என அவர் தெரிவித்தார்.

ஈரானிய ஆதரவு குழுக்கள் உடனான மோதல் விவகாரம் போரைப் பிராந்திய எல்லைகள் கடந்து விரிவடைய செய்து வருகிறது.

இதுவரை காஸாவில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்க 27,238 எனவும் 66 ஆயிரம் காயமுற்றுள்ளதாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com